உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகாவுடன் பேசி தீர்வு என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்

கர்நாடகாவுடன் பேசி தீர்வு என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார் : வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். பின், அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி: கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியுள்ளன. ஆனாலும், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, அப்போதைய கர்நாடக முதல்வர் படேலும், மறைந்த முதல்வர் கருணாநிதியும் பேசினர். பிரச்னையை தீர்க்க முடியவில்லை. வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின் தமிழகம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், பிரதமர் மோடியை சந்தித்தபோது அவர், 'காவிரி பிரச்னை குறித்து, தமிழகத்துடன் பேசி தீர்த்து கெள்ளுங்கள்' என கூறியுள்ளார். ஆனால், பேச்சு வாயிலாக தீர்த்துக் கொள்ளலாம் என்பது, நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மார்கண்டேயன் அணை கட்டுகின்றனர். அதற்கு நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் அவர்கள் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

naranam
ஆக 03, 2024 17:49

மிகவும் சரி! திமுகவை மீண்டும் ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பது போன்றதும் தமிழர்களின் தற்கொலை தான்!


...
ஆக 03, 2024 16:08

உங்க புள்ளி கூட்டணி ஆட்சி தானே கர்நாடகாவில் நடக்கிறது.பேசினாலே தற்கொலை செய்யும் அளவிற்கு இருக்குமா உங்க உறவு


ஆரூர் ரங்
ஆக 03, 2024 15:58

ஒரு கட்டத்தில் கர்நாடகா அரசு நமக்கு ஆண்டுக்கு 305 TMC நீர் தருவதாக ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது . ஆனா இங்கிருந்த திராவிட போட்டி அரசியலால் தமிழக அரசு கூடுதலாக கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றது. இறுதியில் சுப்ரீம் கோர்ட் வெறும் 177 TMC மட்டும் தந்து தீர்ப்பளித்தது. ஆனால் பல கழிசடை ஆட்கள் 500 க்காக அவர்களுக்கே வாக்களிக்கின்றனர். தமிழக மக்கள் செய்து கொள்வது தற்கொலை.


ஆரூர் ரங்
ஆக 03, 2024 15:50

ஸ்டாலினும் சித்த ராமைய்யாவும் மட்டும் தனியறையில் விவாதித்து முடிவு செய்யலாம்.


Ag Jaganath
ஆக 03, 2024 15:40

ஆண்டாகையில் ஆகவில்லை ஏன்று ராஜிநாமா செய்துட்டு போங்கடா உங்க கமிஷன் இல்லை ஏன் நான்தானா சரியாகும் தமிழ் நமுட்டு திருடர்களே


Sivaraman K
ஆக 03, 2024 15:18

அப்படி என்றால் I N.D.I.A கூட்டணி ஒரு தற்கொலை கூட்டணியா?. இதற்காகவா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள்?. உடனடியாக ராகுல் காந்தியை வரவழைத்து இதற்க்கு தீர்வு காணுங்கள். மக்களை முட்டாளாக்க பார்க்காதீர்கள்.


Ramesh Sargam
ஆக 03, 2024 13:02

பிரச்சினையை பேச்சு வாயிலாக தீர்த்துக் கொள்ளலாம் என்பது எப்படி தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் ஆகும்? ஒன்றும் புரியவில்லையே ஒருவேளை மப்பில் இப்படி பேசி இருப்பாரோ...??


Anonymous
ஆக 03, 2024 12:50

உங்களுக்கு தான் பிரதமர் எது சொன்னாலும், செஞ்சாலும் ஆகாதே? பிரதமர் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அவர்களிடம் பேசி சரி பண்ணி கொள்ளுங்கள் என்று சொன்னது தவறு என்றால், உங்களுக்கு ஆகாத ஒன்றிய அரசு எந்த முயற்சி செய்தாலும் கூட ஆகாது தான், வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்.


xyzabc
ஆக 03, 2024 11:44

trial தற்கொலை ஆவது செய்து காட்டுங்கள் துரை . சொல்லுவது உண்மையா ?


Apposthalan samlin
ஆக 03, 2024 11:34

உங்கள் அலையும் அனை கட்ட முடியாது அவர்களாவது கட்டிட்டு போகட்டுமே வீணா தண்ணீர் கடலில் கலக்குகிறது ஒருமாதம் பின்னர் தண்ணீருக்கு சண்டை .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை