உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவன் - மாணவி திருமணம் பள்ளியை முற்றுகையிட்ட உறவுகள்

மாணவன் - மாணவி திருமணம் பள்ளியை முற்றுகையிட்ட உறவுகள்

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தொழிலாளியின், 17 வயது மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இதே பள்ளியில் மாணவர் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சீருடையில் மாணவனும், மாணவியும் பள்ளி வளாகத்தில் திருமணம் செய்து கொண்டனர். அந்த படம் நேற்று பரவியது.தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள், திருமணம் செய்து கொண்ட மாணவன், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு மாணவியின் உறவினர்கள், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மகளிர் போலீசில் புகார் அளித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பர் என, தோகைமலை போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து, குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளிக்க சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி