| ADDED : ஆக 02, 2024 12:45 AM
புதுடில்லி: எஸ்.சி., எனப்படும் பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் அருந்ததியினருக்கு, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 2009ம் ஆண்டு சட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பட்டியலின பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. 2008ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு, இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தது. அதன்படி மாநிலத்தில், பட்டியலின பிரிவினருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க முடிவானது. இதற்கான சட்டம் 2009ல் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, 2009ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சேலத்தைச் சேர்ந்த யசோதா என்பவர் 2015ல் மனு தாக்கல் செய்தார்.இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு, 2011 முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்தொடர்ச்சி 7ம் பக்கம்