உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார், போலீஸ்காரர் கைது

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார், போலீஸ்காரர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை, 40 அடி அகலம் உடையது. இந்த சாலையை ஆக்கிரமித்து, 13 வீடுகள் கட்டி உள்ளனர்.இந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மீட்டெடுக்க, சமூக ஆர்வலர் பொன்தங்கவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2023 செப்., மாதம், ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மீட்டெடுக்க, மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.சோழிங்கநல்லுார் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கடந்த 3ம் தேதி, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார இணை கமிஷனரிடம், பொன்தங்கவேல் மனு கொடுத்தார்.நீதிமன்ற உத்தரவுபடி, மூன்று நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, அறிக்கை வழங்க வேண்டும் என, இணை கமிஷனர், மாநகராட்சி சிறப்பு தாசில்தார் சரோஜாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 5ம் தேதி, பொன்தங்கவேலை வீட்டுக்கு அழைத்த சரோஜா, ஆக்கிரமிப்பை அகற்ற 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.அந்த சாலையை அகற்றினால், அதை ஒட்டியுள்ள பொன்தங்கவேல் மற்றும் வேறு சிலருக்கு சொந்தமான மனைகள் உள்ளன. அந்த இடங்களின் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது. அதை அறிந்த சரோஜா, பொன்தங்கவேலிடம் பேரம் பேசியுள்ளார்.முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாய் தந்தால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்குவதாக, அவரிடம் கூறி உள்ளார்.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பொன்தங்கவேல் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., இம்மானுவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று, ரசாயன பவுடர் துாவப்பட்ட 3 லட்சம் ரூபாயை, பொன்தங்கவேலிடம் கொடுத்து அனுப்பினர்.அடையாறில் உள்ள வட்டார இணை கமிஷனர் அலுவலகத்தில், தாசில்தார் சரோஜாவிடம் பணம் கொடுக்க சென்றார். ஆனால் சரோஜா, பணத்தை வாங்காமல், தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவரிடம் தரும்படி கூறியுள்ளார்.அவர் கூறியபடி, பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலக கார் ஓட்டுனரான போலீஸ்காரர் அருணிடம் அந்த பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், தாசில்தார் சரோஜாவைவும் கைது செய்தனர்.லஞ்ச பணம் வாங்க உறுதுணையாக இருந்த சரோஜாவின் கணவர் பிரவீன் என்பவரை, போலீசார் தேடுகின்றனர். பிரவீன், அருணுடன் பணிபுரியும் சக போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

P.Sekaran
மே 16, 2024 10:33

இந்த லஞ்சத்திற்கு துணை போகிறவர்களுக்கு கடுமையான சட்டம் இருந்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும் இதை எளிதில் லஞ்ச பணத்தை வைத்துக்கொண்டு வந்து பதவியில் அமறுவார்கள் இது நூற்றுக்கு நூறு உண்மை இதை யாராவது மறுக்க முடியுமா?


நல்லவன்
மே 15, 2024 13:39

பொறுப்பான பதவியில் இருக்கும் அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தல் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் - அவர்கள் பிறந்த ஊர் மக்கள் முன்னிலையில்


Ramesh Sargam
மே 15, 2024 12:11

லஞ்சம் வாங்கியவர்களை பிடித்து ஒரு பயனும் இல்லை அந்த அதிகாரியை முதலில் பணியை விட்டு தூக்கவேண்டும் ஜாமீன் இல்லாமல் வழக்கு தொடர்ந்து அந்த பெண் அதிகாரி மற்றும் போலீஸ் மற்றும் அந்த லஞ்சம் பெறுவதில் பங்கு கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்


K.n. Dhasarathan
மே 15, 2024 12:03

ஒரு கோடி ரூபாய் லஞ்சமா?, அந்த அதிகாரியின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து கோர்ட் உத்தரவு இல்லாமல் ஒரு ரூபாயும் எடுக்க முடியாமல் செய்ய வேண்டும், தவிர பணியிலிருந்து உடனடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவிற்கே இந்த நிலையா ?


சுந்தரம் விஸ்வநாதன்
மே 15, 2024 11:54

தினமலரின் இன்றைய செய்திகளில் சூப்பர் செய்தி இதுதான்


M Ramachandran
மே 15, 2024 11:17

பெரியதலையிலிருந்து சோட்டா தலை வரை புரையோடி இருக்கு மக்கள்பணம் தானே அம்மா குடி அப்பா குடி கையாரிப்பு என்று சொன்ன கும்பல் அதை சரியாக நிறைவேற்றி கொண்டிருக்கிறது


Indhuindian
மே 15, 2024 11:05

எதுக்கு மூக்கை சுத்தி தொடறீங்க இந்த அன்பளிப்பை முதல்லயே குடுத்திருந்தா கோர்டுக்கெல்லாம் போகமா இவர்களே முடிச்சு வெச்சிருப்பாங்க யதார்த்தம் புரியாத மனிதர்கள்


Sampath Kumar
மே 15, 2024 11:01

லஞ்சம் என்று வந்து விட்டால் ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை போல சும்மா புகுந்து விளையாடுது தாய் குலம் நாடு விளங்கிடும்


M S RAGHUNATHAN
மே 15, 2024 10:53

நீதி மன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம் கேட்டால், அந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு திமிர், ஆணவம் இருக்கும் நிச்சயம் அந்த பணம் மேல் அதிகாரிகள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது இந்த அதிகாரிகளுக்கு ஜாமீனில் வெளி வர முடியாதபடி remand செய்ய வேண்டும் வழக்கு நடந்து முடியும் வரை சிறையில் இருக்க உத்தரவிட வேண்டும் அந்த அதிகாரிக்கு துணையாக இருந்தவர்களும் அதே தண்டனையை அனுபவிக்க வேண்டும் ஜாமீன் வழங்குவதால் தான் லஞ்சம் வாங்குவதில் அதிகாரிகள் பயப் படுவது இல்லை


.Dr.A.Joseph
மே 15, 2024 09:37

சாகும் காலம் வரையிலும் சிறையில் அடையுங்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ