உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தமிழகம் பயனடையவில்லை

பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் தமிழகம் பயனடையவில்லை

நாமக்கல்: ''தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும், பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் இதுவரை பயன் பெறவில்லை,'' என, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர், ஷோபா கரந்த்லாஜே கூறினார்.இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது: பிரதமரின், விவசாயி களுக்கான கவுரவ நிதி திட்டத்தின், 17வது தவணையின் கீழ், 9.26 கோடி பயனாளிகளுக்கு, 20,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்தை, ஒரே நேரத்தில் பிரதமர் மோடி விடுவித்துள்ளார். மேலும், 'இப்கோ' மூலம் வேளாண் தோழிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நாடு முழுதும் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளார்.தமிழகத்தை பொறுத்தவரை, பிரதமரின் விவசாய நிதி திட்டம் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு, அவர்கள் தங்கள் பெயரை திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான அரசு அலுவலர்கள், விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்வதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள் திட்டத்தில் பயன்பெற முடியும்.தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தில் இதுவரை பயன் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன் பெற, அவர்களின் பெயர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Navaneetha Krishnan Guru
ஜூன் 19, 2024 10:55

இது திராவிட திருட்டு மண்.. இங்கு கலைஞர் குடும்பத்தின் அடிமைகள் வாழ்கின்றனர்...அவர்களை அடிமைத் தனத்தில் இருந்து மீட்க வேண்டும்


venugopal s
ஜூன் 19, 2024 10:28

இந்த மத்திய அமைச்சர் தான் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பை செய்தது தமிழர்கள் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தியவர். இப்போது திடீரென தமிழக விவசாயிகள் மீது என்ன அக்கறை வந்து விட்டது?


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 12:16

சிலிண்டர் வெச்சவன் தமிழனா இல்லையா? கஃபே குண்டு வெச்ச கூட்டத்திற்கும் இலங்கை சர்ச்சுகளுக்கு குண்டு வெச்சவனும் தொடர்பு இருக்கிறது.


sangarapandi
ஜூன் 19, 2024 09:56

பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் விவசாயம் செய்யும் அனைவரையும் சேர்க்க வேண்டும், அதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. இதில் வருமானவரி செலுத்துபவர்களையும் விவசாயிகளாக அங்கீகரிக்கவேண்டும் .அப்போது தான் விவசாயம் நல்ல முறையில் நடைபெறும் .


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 10:42

எந்த விவசாயியும் வருமான வரி கட்டுவதாக தெரியவில்லை. முழு வரிவிலக்கு. இதனை தவறாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் அதிகம் .


Palanivel
ஜூன் 19, 2024 08:28

இதற்கு யார் காரணம் நாமக்கலில் உள்ள அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு தகவல் தந்து வழிமுறைகளை சொல்லி பயனடையும்வரை பணியாற்றனும்


raja
ஜூன் 19, 2024 08:17

திருடன் கையில் சாவி இருக்கும் போது திருட்டை பற்றி பேச கூடாது என்று ருவா இறநூறுக்கும் ஒரு குவார்ட்டர் கோழி பிரியாணிக்கு திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பத்திடம் விலை போன தமிழன் கேள்வி கேட்க உரிமை இல்லை.....


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 06:54

பிஜேபி என்றாலே ஏமாத்துவேலை தானே.


PARTHASARATHI J S
ஜூன் 19, 2024 08:15

தங்களது கருத்து காழ்ப்புணர்ச்சி. அனைத்து மாநில விவசாயிகளும் பயனடைந்திருக்கிறார்கள். இது அரசு திட்டம். கட்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. தங்களது கருத்தே வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக விவசாயிகளிடம் பாஜக தலைவர்கள் விழிப்பூணர்வூ ஏற்படுத்த வேண்டும்.


Thiruvengadam Ponnurangam
ஜூன் 19, 2024 08:22

நல்ல படிச்சி பார்த்து குறை சொல்ல வேண்டும். இந்த திட்டத்தில் பத்தி மாநில அரசில் உள்ளன வேளாண்மை துறை அல்லது விவசாயம் துறை சேர்ந்தவர்கள் இந்த விபரத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ..அப்படியே விவசாயி போனாலும் பதிந்து கொடுக்க இதனை பற்றி அவங்ககுலிம் தெறிந்து இருக்க வேண்டும்


Kumar Kumzi
ஜூன் 19, 2024 08:28

பார்ர்ரா கொத்தடிமை சான்றிதழ் தாறாரு ஹீஹீஹீ


raja
ஜூன் 19, 2024 06:02

எங்க கட்டுமரத்தின் புகைப்படத்தையும் விடியலின் புகைப்படத்தையும் ஒட்டி கொண்டு திட்டத்திற்கு கட்டுமர பெயர் வைத்தால் விவசாயிகள் மற்றும் உடன் பிறப்புகளும் நூறு சதம் பயனடைந்து இந்த திட்டத்தை திருட்டு திராவிடர்கள் வெற்றி பெற வைப்பார்கள்....


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 05:49

பதிவு செய்யக்கூட தெரியாமல் இருக்கிறார்களா அல்லது குறைந்த தொகைதானே நமக்கு வேண்டாம் என்று இருக்கிறார்களா..


Thiruvengadam Ponnurangam
ஜூன் 19, 2024 08:25

பதிவு எங்கு செய்யவேண்டும் என தெரியந்தவர்கள் பலர். இந்த மாதிரி திட்டம் இருக்கு என தெரியாதவர்கள் பலர்.. இதனை கொண்டு சேர்க்கும் அலுவலர் யார் என தெரியாமல் பலர்.. இப்ப பெரும்பாலான வேளாண் தேவரை அதிகாரிகள் விவசாயிகளை தேடி போவதில்லை.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 19, 2024 05:16

தமிழக பிஜேபி மாவட்ட தலைவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இலவச காஸ் இணைப்பை கூட திருட்டு திராவிட கழகத்தின் கவுன்சிலர்கள் அவரகளது ஆதரவாளர்களுக்கு பெற்று தருகிறார்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி