உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : ''தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026 ஆண்டு தேர்தல்'' என்று அக்கட்சியின் பொது செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.ஈரோடு, வீரப்பன் சத்திரத்தில், அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சியுடன், தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து, தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக வெற்றிக்கழகத்தில் லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.கடந்த, 30 ஆண்டுகளாக விஜய் ரசிகர்கள் மக்கள் பணி செய்து வருகின்றனர். இது தற்போது தமிழக வெற்றிக்கழகமாக மாறியுள்ளது. எங்களின் இலக்கு, 2026 தேர்தல் தான். எங்கள் சேவைக்கான பலன் 2026ல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தநாவின் பரிதாபம்
ஜூன் 15, 2024 23:22

2021ல் ரஜினி, கமல் B டீம் 2026ல் விஜய் , இ.பி. எஸ் B டீம் தநா. லிடியாலார்கள் வசம் தான் அடுத்த முறையும்.


kulandai kannan
ஜூன் 15, 2024 15:43

சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு கட்சி


Yuvaraj
ஜூன் 15, 2024 15:16

அடுத்த கமலஹாசன்


Sridhar
ஜூன் 15, 2024 14:16

குறைந்த பட்சம் விஜய்காந்து மாதிரி வருவாரா, இல்ல கமலஹாசன் மாதிரி கவுந்துருவாரான்னு 2026 தேர்தல்ல தெரிஞ்சிடும். விஜய்காந்து மாதிரி வந்தாலே போதும், பேரம்பேசி வேண்டியதை வாங்கிக்கொண்டு சமாளித்துவிடலாம். சிவாஜி கமலஹாசன் மாதிரி ஒரேடியா ஊத்திக்கிச்சுன்னாதான் பிரச்சனை, தமிழிசை மாதிரி அதுவும் இல்லாம இதுவும் இல்லாம, நடுதெருல நிக்கற நிலமையாயிடும்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 15, 2024 13:03

இருக்கிற katchi போதாதா/ இதில் இவர் வேற ........


Sampath Kumar
ஜூன் 15, 2024 11:55

முன்பு எல்லாம் ஒரு இனத்தின் குணம் தெரியநாளாகும் அம்புட்டு தந்திரமா ஆப்பு அடிப்பானுக இப்போ அடிக்க காய் ஓங்கும் மன்பஈ ஆப்பு வாங்குறானுக யாரு என்று புரிந்தால் அவன் பிஸ்தாட


hariharan
ஜூன் 15, 2024 11:32

யோவ் அந்த பொதுச்செயலாளர் பேருக்கு முன் உள்ள அடைமொழியை மாற்றவும்.


Anand
ஜூன் 15, 2024 12:31

அடைமொழிக்கு ஏற்றபடிதான் அவன் உள்ளான்.


Anand
ஜூன் 15, 2024 10:37

இவரால் திமுக தான் ஆதாயம் பெறும். அதாவது தமிழ்நாடு இன்னும் மோசமான நிலைக்கு தள்ள இவரும் முடிந்த அளவு உதவுவார்.


Rajarajan
ஜூன் 15, 2024 09:56

அரைத்த மாவையே இங்கு அரைப்பதற்கு மன்னிக்கவும். ஆனால், இவை தான் நிதர்சனம். அரசியல்வாதி ஆக எந்த ஒரு தகுதியும் தேவையில்லை. ஒரு வெள்ளை வேஷ்டி, ஒரு வெள்ளை சட்டை, கட்சி உறுப்பினர் அட்டை வாங்க சுமார் நூறு ரூபாய் மட்டுமே. அவ்வளவு தான். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தான், இவையனைத்தும் உதவாது. நிர்வாக திறமை தான் வேண்டும். எப்படி ?? நிதி இல்லையேல் ஆட்சி இல்லை இதற்கும் நிதி குடும்பத்தாருக்கும் சம்பந்தமில்லை. இந்த நிதி என்பது பொருளாதாரம். வரவுக்கும் செலவுக்கும் சரி செய்வது. அடுத்து வரும் செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுவது, அதை சமாளிப்பது. சமாளிப்பது என்பது தற்போது, கூடுதல் வரி போடுவது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். இதுவே அவர்கள் சொந்த நிதியிலிருந்து இந்த பற்றாக்குறையை சரிசெய்வவேண்டும் எனில், ஆட்சியில் அமர்வாரா ?? ஆட்சிக்கு வந்தால், வெறும் கையெழுத்து மட்டும் போட்டால் போதும். அரசு இயந்திரம் தானே தொடர்ந்து சுழலும் என்பதால் தானே, பதவிக்கு வருகின்றனர்.


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 09:22

முன்பெல்லாம் படங்கள் நூறு இருநூறு நாட்கள் ஓடும். இப்ப இரண்டாவது வாரமே கூட முடங்கி விடுகின்றன. இந்தக் கட்சியும் அல்பாயுசு கட்சிதான்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை