மேலும் செய்திகள்
9 பேர் பலியான விபத்து: அரசு பஸ் டிரைவர் கைது
4 hour(s) ago | 5
ஸ்ரீரங்கம் கோவிலில் கட்டண கொள்ளை; வி.எச்.பி., கண்டனம்
4 hour(s) ago
கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவிக்கு காப்பு
4 hour(s) ago
சென்னை : 'டாஸ்மாக்' கடை மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்திய, மதுக்கூட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடை மேற்பார்வையாளராக நாகசாமி என்பவர் பணிபுரிகிறார். கடைக்கு அருகில் ஒருவர் சட்ட விரோதமாக மதுக்கூடம் நடத்துவது குறித்து, மேற்பார்வையாளர் புகார் அளித்துள்ளார். இதனால், மேற்பார்வையாளர் மீது, மதுக்கூட உரிமையாளர் தாக்குதல் நடத்தியுள்ளார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பேச்சு நடத்தியும், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில், கலெக்டரும், தமிழக அரசும் தலையிட்டு, சட்ட விரோதமாக மதுக்கூடம் நடத்துவதுடன், ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 5
4 hour(s) ago
4 hour(s) ago