உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களுக்கு இனி எமிஸ் பணி கிடையாது

ஆசிரியர்களுக்கு இனி எமிஸ் பணி கிடையாது

சென்னை : அரசு பள்ளிகளில், 'எமிஸ்' தளத்தில், மாணவர், ஆசிரியர் விபரம் பதிவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 10க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள் முறையாக மாணவர்களை சேருகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாணவர் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு, அதில் நலத்திட்ட உதவிகளும் பதிவேற்றப்படுகின்றன.அதேபோல, ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை மேற்கொள்வது, தற்காலிக மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர்களுக்கான எமிஸ் அடையாள எண் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளையும், ஆசிரியர்கள் தான் செய்து வந்தனர். இந்த பணிகளால், மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியவில்லை. போட்டி தேர்வுகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கவும் முடியவில்லை என, ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, 8,000க் கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை, தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், பள்ளிகளின் ஆய்வக கண்காணிப்பு, எமிஸ் பணிகள், நலத்திட்ட உதவி விபரம் பதிவேற்றுதல், ஸ்மார்ட் வகுப்பறை, ஹைடெக் ஆய்வக கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை தற்காலிக ஊழியர்கள் மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sivakumar Thappali Krishnamoorthy
ஜூன் 21, 2024 11:49

இப்பொழுது அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடத்தை சரியாக நடத்துவதில்லை. யு டுப்ஸ் மூலம் நீங்களாய் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறும் அளவிற்கு உயர்ந்து விட்டார்கள். அரசும் உயர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி 80% உயர் பள்ளி ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பும் சேவைகளை துவக்குமாறு வேண்டி கொள்கிறோம் .


Lion Drsekar
ஜூன் 21, 2024 09:16

என்றைக்கும், தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு அதே நேரத்தில் இதுபோன்ற பணிகளும் கொடுக்கப்படுகிறது . அவர்களுக்கும் இதே போன்று சுதந்திரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் தனியாக இந்த பணிக்காக பணியமர்த்தினால் அந்த பள்ளிகளில் இவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் கேட்டு பதிவு செய்யவேண்டிய நிலவிவரும். அதற்க்கு அவர்கள் நினைப்பார்கள் வெளியில் வந்து இருக்கும் இந்த நபருக்கு நாம் நேரம் ஒதுக்கி செய்வதற்கு பதிலாக நாமே செய்துவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும், இதற்க்கு பதிலாக ஒவ்வொரு கணினி பயிற்றுவிக்கும் ஆசிரியர் பெருமக்களை இந்த பணியில் அமர்த்தினால் வேலையும் சீக்கிரமாக முடியும், அவர்களுக்கும் பள்ளியின் நிர்வாகம், செயல்பாடுகள் தெரியும் . ஆகவே புதிதாக ஒரு கணினி ஆசிரியரை நியமித்து அவர்களை குழந்தைகளுக்கு பாடம் கரிப்பிக்க பயன்படுத்தலாமே . வந்தே மாதரம்


raja
ஜூன் 21, 2024 07:28

அப்புறம் ரெண்டு வருசம் கழித்து அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று போராடுவார்கள்... அப்போதைய எதிர் கட்சி தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதற்கு ஆதரவு தருவார் அடிமை ஊடகங்கள் அதற்கு விவாதங்களை போட்டி போட்டு நடத்துவார்கள்.. திருட்டு திராவிட காசிக்கு வாயை வாடகை விடுபவர்கள் கொக்கரிபார்கள்...


கூமூட்டை
ஜூன் 21, 2024 11:34

இது தான் திராவிட கூமூட்டை மாடல்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை