உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி எச்சரித்து அனுப்பிய பா.ஜ., மேலிடம்

கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி எச்சரித்து அனுப்பிய பா.ஜ., மேலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தங்களின் இஷ்டத்திற்கு பொது வெளியில் கருத்து கூறக்கூடாது; தலைமையின் அறிவுறுத்தலின்படியே செயல்பட வேண்டும் என, கட்சி மேலிடம் எச்சரித்து, கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையில் கூட்டணி இருந்தது. தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் மாநில செயலர்கள் என, கட்சியில் செல்வாக்கு உள்ள நபர்களுக்கு, 'சீட்' வழங்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1bx8y1ov&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்ததுடன், திராவிட கட்சிகளின் கட்சியினரை கவனிக்கும், 'பார்முலா'வை பா.ஜ.,வும் பயன்படுத்தியது. அப்படி இருந்தும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மீது, கட்சி தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பின், தமிழக பா.ஜ.,வை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள், உள்கட்சி விவகாரம் குறித்து, தங்கள் இஷ்டத்திற்கு கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலிடத்தில் செல்வாக்கு உள்ள நபர்கள் தனி கோஷ்டிகளை உருவாக்கி வருகின்றனர். இவை, டில்லி மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அண்ணாமலை, மாநில துணை தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டில்லி வந்திருந்தனர். அவர்களை, மேலிட தலைவர்கள் அழைத்து பேசினர். அப்போது, ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு கொடுத்துள்ள கட்சி பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்; அதை விடுத்து, இஷ்டத்திற்கு பொது வெளியில் பேச கூடாது. மாநில தலைவர் உட்பட அனைவரும் முறையான செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தி, தகவல்களை தெரிவிக்க வேண்டும்; பொது வெளியில் அவசியம் இல்லாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும். கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு, அனைவரும் செயல்பட வேண்டும். அதை விடுத்து, ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு வேண்டியவர்களுடன் கோஷ்டியாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி முடிவை விமர்சித்து கருத்து கூறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

V. Kanagaraj
ஜூன் 13, 2024 11:57

கோவையில் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் தேர்தலில் வென்று காண்பிப்பதாக அண்ணாமலை கூறினார். ஆனால் 300 கோடி ரூபாய் செலவு செய்ததாக சோசியல் மீடியாக்களில் பேச்சு அடிபடுகிறது. மாற்றத்துக்கான கட்சி என்று உதார் விட்டு நானும் சராசரி அரசியல் வாதி என்பதை திரு அண்ணாமலை நிரூபித்து விட்டார்.


vittalganesh
ஜூன் 13, 2024 08:24

கிருஷ்ணஸ்வாமி ஐஸ் நோட் வித் பிஜேபி


kalyan
ஜூன் 13, 2024 00:14

கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நின்றவர் அண்ணாமலையின் ஊழியப்பின் பயனை திருடி மீண்டும் தான் தலைவராகும் நப்பாசையில் வந்தார் . மக்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டி விட்டனர் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் அண்ணாமலையை குறை கூறி தப்பிக்க முதற்சிக்கிறார் . கவர்னராகவே இருந்திருந்தால் ஒரு நல்ல கட்சிக்காக உழைத்த வாக்காளரை தேர்தலில் நிறுத்தி கட்சி உழைத்தவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை தொண்டர்களிடையே உருவாக்கியிருக்கலாம் . RSS பத்திரிக்கை கூறுவதுபோல் கட்சி தாவி வந்தவர்களை தேர்தலில் நிற்க வைத்ததனால் ஏற்கனவே உழைத்தவர்கள் விரக்தியாகி சரியாக தேர்தல் வேலை செய்யாமல் , வாக்காளர் தோல்வியை தழுவுகிறார் . 2016 தில்லி, பிறகு பீகார் , வங்காளம் இப்போது தமிழ்நாடு போன்ற பல தேர்தலிலும் இந்த தவறை பிஜேபி செய்து தோல்வி அடைத்துள்ளது . இன்னமும் கற்க வேண்டும் . அண்ணாமலையை அவர் விருப்பத்துக்கு எதிராக நிறுத்தியது 400 அடைய வேண்டிய ஆசையில் தான் அவர் நிற்காவிட்டால் கட்சிக்காரர்கள் ஒன்றாக உழைத்திருப்பார்கள்


venugopal s
ஜூன் 12, 2024 12:37

பாஜக மிகவும் நேர்மையான கட்சி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வில்லை என்று எல்லாம் இங்கு நிறைய பாஜக ஆதரவாளர்கள் நம்புகின்றனர். நீங்கள் என்னவென்றால் திராவிடக் கட்சிகளின் பாணியில் வாக்காளர்களை பாஜக கவனித்தும் வெற்றி பெற வில்லை என்று இப்படி உண்மையைப் போட்டு உடைத்தால் அவர்கள் பாவம் மனசு உடைந்து போய் விட மாட்டார்களா? இதனால் உண்டாகும் விபரீதமான விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு!


xyzabc
ஜூன் 13, 2024 10:43

You are screwed up venugopal


தமிழ்
ஜூன் 12, 2024 12:01

எல்லாவற்றுக்கும் மேல் கட்சியின் மற்ற தலைவர்கள் போனில் பேசுவதை ரெகார்ட் செய்து வெளியீடுவதை நிறுத்தவேண்டும். பத்திரிகையாளர்களைக் கண்டால் இஷ்டத்திற்கும் பேசுவதை நிறுத்த வேண்டும்.


pmsamy
ஜூன் 12, 2024 08:00

எல் கே ஜி யில் அண்ணாமலை தோல்வி அடைந்ததற்கு பாவம் நல்ல திட்டுறாங்க


Jai
ஜூன் 12, 2024 07:35

கட்சியிலிருந்து ரிட்டையர் ஆகி ஆளுநர் ஆன பிறகு மீண்டும் கட்சி பணி செய்வது என்பது தேவையில்லாத ஒன்று. நீங்கள் தலைவராக இருந்த காலத்தில் கட்சி வாக்கு சதவிகிதம் என்ன? தற்போது இருக்கும் வளர்ச்சி யாரால் வந்தது?


venugopal s
ஜூன் 12, 2024 07:12

தமிழக பாஜக கோஷ்டி மோதலிலும் குரூப்பிஸத்திலும் தமிழக காங்கிரஸ் கட்சியை முந்தி விடுவார்கள் போல் உள்ளதே! மிக்க மகிழ்ச்சி!


Svs Yaadum oore
ஜூன் 12, 2024 07:05

நாகப்பட்டினத்தில் ஒரு லட்சம் ஓட்டுகள். தஞ்சாவூரில் ஒரு லட்சத்து எழுபதாயிரம், டெல்ட்டாவில் கால் பதித்தது ப ஜா க. திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் வோட்டுகள் .... இதெல்லாம் எப்படி வந்தது? தமிழ் நாட்டில் முழு நேரமும் ப ஜா க எதிர்ப்பு பிரச்சாரம்.. தொலை காட்சி முழுக்க திராவிட மதம் மாற்றிகள் பிடியில். இதற்கு முன் இருந்த ப ஜா க தலைவர் பெயராவது இங்கு யாருக்காவது தெரியுமா ??....


Svs Yaadum oore
ஜூன் 12, 2024 06:52

ஒரு தொகுதியில் கூட பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லையாம்.. ஆனால் ப ஜா க தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு வளர காரணமே அண்ணாமலைதான். அவருக்கு முன் இந்த கட்சி இருப்பதே தமிழ் நாட்டில் யாருக்கும் தெரியாது .. இங்குள்ள திராவிட மதம் மாற்றிகள் தொடர் பிரச்சாரத்தை முறியடித்து மேலும் வாக்குகள் வாங்க இன்னும் நாட்கள் ஆகும் ... முழு நேரமும் ப ஜா க எதிர்ப்பு பிரச்சாரம். தொலை காட்சி முழுக்க திராவிட மதம் மாற்றிகள் பிடியில் ...திராவிட மதம் மாற்றிகள் தீவிர மோடி எதிர்ப்பு பிரச்சாரம் இங்கு வளர்த்த போது இங்கு யார் ப ஜா க தலைவராக இருந்தது?? ....


கனோஜ் ஆங்ரே
ஜூன் 12, 2024 17:47

பாஜக தனிச்சு நின்னு வாக்குகள் வாங்கியிருந்தா பாராட்டலாம்.... தென்மாநிலங்கள் கிருஷ்ணசாமி போன்ற கட்சிகள் போட்ட வாக்குகளையும் சேர்த்து.. “அடுத்த வீட்டு பிள்ளைக்கு இனிஷியல் வச்சிக்கிறீங்களே”...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி