உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெற்ற குழந்தையை அடித்து கொன்ற கொடூர தந்தை கைது

பெற்ற குழந்தையை அடித்து கொன்ற கொடூர தந்தை கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம், 31; ஊட்டி தனியார் கூரியர் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரம்யா, 21. பிரேம் வழக்கம் போல் நேற்று காலை 7:00 மணிக்கு பணிக்கு சென்றார்.தம்பதியின் ஐந்து மாத பெண் குழந்தையின் கன்னங்கள் சிவந்த நிலையில், எந்த அசைவும் காணப்படாமல் இருந்தது. இதைப்பார்த்த ரம்யா பயந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷனில் ரம்யா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில், ரம்யா வீட்டின் அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது குழந்தை அழுததால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு, ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது. போலீசார் பிரேமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 01, 2024 11:05

கடைசில் குற்றம் நிரூபிக்கப்படுவது இல்லை இப்பொழுது போலீஸ் வக்கீல் நீதி செலவு தான் வீணாகிறது. குற்றம் விசாரணை முடிவதற்குள் புது குழந்தை பிறந்துவிடும் மனிதன் இப்போது விலங்கு என்று சொல்லமுடியாது. என் ஆடு மாடு நாய்கள் அப்படி செய்வதில்லை.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ