உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட காவிரி நீர் 5ம் நாளாக கடலில் கலந்து வீணாகியது

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட காவிரி நீர் 5ம் நாளாக கடலில் கலந்து வீணாகியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை : கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீர் 5ம் நாளாக வீணாக கடலில் கலப்பது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. அணை நிரம்பியதால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக கொள்ளிடத்தில் ஆக.,2ம் தேதி காலை 5:00 மணிக்கு வினாடிக்கு 74 ஆயிரத்து 225 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு இரவு 8:00 மணிக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 954 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 3ம் தேதி ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 400 கன அடியும், 4ம் தேதி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 73 கன அடி நீர் திறக்கப்பட்டது.5 நாட்களாக தண்ணீரை சேமிக்க வழியின்றி, வாய்க்கால் வழியே திருப்பி விட்டு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் வீணாக கடலில் கலக்கிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீரை எதிர்நோக்கி காத்திருந்த விவசாயிகளுக்கு பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பது வேதனையை அளித்துள்ளது.முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், அதை அரசு செவி மடுக்காததால் வருண பகவான் வரமாக அளித்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இனிவரும் காலங்களிலாவது தண்ணீரை வீணடிக்காமல் குடிநீர், விவசாயத்திற்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு ரூ.463 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குமாரமங்கலம் கதவணை பணியை விரைந்து முடித்து தண்ணீரை தேக்க வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றில் 5 கி.மீ., துாரத்திற்கு ஒரு கதவணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 117 )

Dharmavaan
ஆக 21, 2024 10:14

மூடர்கள் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போடுவதை நிருத்தும் வரை இது தீராது


V RAMASWAMY
ஆக 17, 2024 09:04

மக்கள், விவசாயிகள், வல்லுநர்கள் எவ்வளவு குரல் கொடுத்தாலும் இயற்கை அள்ளி அள்ளிக் கொடுக்கும் நீரை வீணடிக்காமல் தடுப்பணை கட்டியிருந்தால் தண்ணீருக்கு திருவோடு ஏந்தும் நிலை வந்திருக்காது. திராவிட மாடல் என்று பீற்றிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?


M Ramachandran
ஆக 28, 2024 03:01

தமிழ்நாடு கட்டிய பல தடுப்பணைகள் நீரில் கரைய்யந்து நீருடன் சென்று விட்டன. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். நீர் திறந்து விடவில்லையய என்று ஐயா துறைமுருகன் டில்லிக்கு கடிதம் எழுதிக்கிறோம் என்று கூறினார். ஆனால் நிர் வீண்ணாக்கியதற்கு யார் பொறுபேர்ப்பார்கள். இதற்கு என்ன பதில்? பொறுப்பற்று மற்றவர்கள் மீது பழி போடுவது ஒரு சிறந்த ஆளுமையா? ஆற்று மணலை சுரண்டி சுரண்டி காசாக்கியாச்சி இப்போ காவேரி ஆற்றின் மூலம் வரும் தண்ணீர் கண்ணமாய்க்கு கீழ் செல்வதால் விவசாயத்திற்கு உபயோக்க படுத்த முடிய வில்லை. இதற்கு யார் பொறுப்பு?


சந்திரசேகர்
ஆக 08, 2024 06:27

தண்ணீர் இருந்தால் மணல் எப்படி திருட முடியும். அதனால் தான் தண்ணீர் வெளியேற்றம். மணல் வித்த காசு சாராயம் வித்த காசுலதான் ஓட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுக்குறோம். அப்ப ஓட்டுக்கு பணம் மட்டும் வேனும். ஆனால் நாங்கள் சாம்பாதிக்காம எப்படி ஓட்டுக்கு பணம் கொடுப்பது


krishna
ஆக 08, 2024 04:34

KARNATAKA CONGRESS ARASAI THANEER VIVASAYATHUKKU KEKKA THUPU ILLADHA KAIPULLA AAVARGALAAL VIVASAYIGAL PAYIR VAADI THARKOLAI.


rama adhavan
ஆக 08, 2024 04:16

காவேரி நீரை தமிழகம் வீண் அடிக்கிறது என்னும் கர்நாடக அரசின் கூற்றுக்கு இன் நிகழ்வு வலு சேர்க்கிறது. ?


இராம தாசன்
ஆக 08, 2024 02:54

கடந்த 50 ஆண்டுகளில் ஏதாவது உருப்படியாக செய்து உள்ளார்களா? சிற்ப கலை / கட்டட கலைக்கு பெயர் போன தமிழத்தில் ஏதேனும் சொல்லும்படியாக செய்துள்ளார்களா? இருக்கும் பெருமையை தக்க வைக்க எந்த முயற்சியும் இல்லை.. இன்னும் கொஞ்சம் வருஷம் போனால் நம் முன்னோர்கள் கட்டி வைத்த / சேர்த்து வைத்த பெருமை அனைத்தும் மொத்தமாக காணாமல் போய்விடும்.


Kasimani Baskaran
ஆக 07, 2024 22:31

திராவிடக்கோட்பாடுகளில் மிக முக்கியமானது கட்டாந்தரையில் அணை கட்ட முடியாது என்பது.


சிந்தனை
ஆக 07, 2024 21:52

நல்லவேளை. கடல் தண்ணீர் வற்றாமல் திராவிஷ அரசு பார்த்துக்கொள்கிறது!


திராவிடன்
ஆக 07, 2024 21:50

ம்... அது சரி... இப்ப தண்ணீரை தடுத்து சேமித்து வெச்சா, நாளைக்கு எதை சொல்லி கர்நாடகா கிட்ட சண்டை போடுறது... தமிழர்களே கொதித்து எழுங்கள் என்று கத்துவது...


பாரதி
ஆக 07, 2024 21:48

என்னங்க தண்ணீரா இப்ப முக்கியம் சாராயம் தானே முக்கியம் இதுதாங்க திராவிட மாடல்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை