உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி

கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி

புதுச்சேரி: புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிய பி.டெக்., பட்டதாரி சுருண்டு விழுந்து இறந்தார்.புதுச்சேரி, பாக்கமுடையான்பேட்டை, முல்லை நகரை சேர்ந்தவர் ஹரிகரன் மகன் கிேஷார், 21; பி.டெக்., பட்டதாரியான இவர், உயர்கல்வி படிக்க வெளிநாட்டில் விண்ணப்பித்திருந்தார்.இந்நிலையில், லாஸ்பேட்டை ஏர்போர்ட் விளையாட்டு மைதானத்தில், சக நண்பர்களுடன் நேற்று காலை 9:00 மணியளவில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, கிேஷார் திடீரென சுருண்டு கீழே விழந்தார். மூச்சு பேச்சின்றி கிடந்த அவரை, சக நண்பர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.முதல்கட்ட விசாரணையில், கிேஷாருக்கு 2 வயதில் இருந்து இதயத்தில் பிரச்னை உள்ளது. அதற்காக அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், அவருக்கு அடிக்கடி மயக்கம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை