உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் தனித்து போட்டியிட தைரியமில்லாத கட்சி தி.மு.க., வானதி சீனிவாசன் அறிக்கை

தேர்தலில் தனித்து போட்டியிட தைரியமில்லாத கட்சி தி.மு.க., வானதி சீனிவாசன் அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''தமிழகத்தில் தனித்து போட்டியிட தைரியமில்லாத ஒரே கட்சி தி.மு.க., தான்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8oidpkon&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாது என, கோவை தி.மு.க., பொதுக் கூட்டத்தில் சிலர் பேசியிருக்கின்றனர். ஆனால், கோவையில் போட்டியிட்டு வென்று தான் நான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். ஆனால், கோவை மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை.கடந்த 1996ல் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வென்றபோதே, தமிழகத்தில் பா.ஜ., கால் பதித்துவிட்டது. 2014ல், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாமல் கன்னியாகுமரி தொகுதியில் வென்றது.தி.மு.க.,வுக்கு எதிரான கட்சிகள் கூட்டணி அமைக்காமல் பிரிந்து போட்டியிட்டதால் தான், தி.மு.க., கூட்டணி 40 இடங்களிலும் வென்றது. 1957ல் இருந்து போட்டியிடும் தி.மு.க., ஒரு தேர்தலில் கூட தனித்து நின்றதில்லை.தமிழகத்தில் தனித்து போட்டியிட தைரியமில்லாத ஒரே கட்சி தி.மு.க., தான். ஒரு தேர்தலிலாவது தனித்து போட்டியிட்டு வென்று, அதன் பிறகு பா.ஜ.,வை ஸ்டாலின் விமர்சிக்கட்டும்.கூட்டணி இல்லாமல் வெல்லவே முடியாத தி.மு.க., தனித்து ஆட்சியமைப்பது, மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. இனியாவது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் தி.மு.க., இடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுங்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

K.n. Dhasarathan
ஜூன் 20, 2024 17:10

இப்போ கூட்டணியினால்தான் உங்க ஆட்சி ஓடுது, தனித்து நின்றாள் முட்டைதான், சும்மா உங்களுக்க வாய் இருக்கு என்று பேசாதீர்கள்


J. Vensuslaus
ஜூன் 20, 2024 15:50

உங்க கட்சி?


ThamizhMagan
ஜூன் 18, 2024 20:30

NDA மட்டும் என்ன வாழுதாம்? அதுவும் தேசிய, மாநில அளவில் கூட்டணிதானே? 30% வோட்டுக்களில் எந்த கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறாது. ஆகவே கூட்டணி என்பது நான்கு அல்லது அதிக கட்சிகள் போட்டியிடும்போது, இன்றியமையாதது


Muralidar S
ஜூன் 18, 2024 17:36

அந்த கூட்டணி சப்போர்டில் தான் மத்தியில உங்க ஆட்சி....அக்கா யோசித்து பேசுங்க...


MADHAVAN
ஜூன் 18, 2024 16:43

உங்க பவுசுதான் இப்போ இந்தியா முழுசும் பல்லிலுக்குதே,


saiprakash
ஜூன் 18, 2024 13:12

நானும் கோவை தான் உங்களோட பவுசு தான் ,எங்களுக்கு தெரியுமே ,ஆரம்பத்தில் உங்களோட இருப்பு என்ன ,இப்பொழுது உங்களோட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எப்படி வந்ததுன்னு சொல்லமுடியுமா


S Regurathi Pandian
ஜூன் 18, 2024 11:44

திமுகவுக்கு அந்த தைரியம் இல்லை என்பது உண்மைதான். பாஜகவுக்கு அந்த தைரியம் உள்ளதா. அடுத்த கட்சிகளின் கூட்டணியோடுதானே இந்த அளவாவது பாஜக வளர்ந்துள்ளது. பிறரை நோக்கி ஒரு விரலால் குற்றம் சாட்டினால் இவர்களை நோக்கி 4 விரல்கள் நீள்கிறதே


K.n. Dhasarathan
ஜூன் 18, 2024 11:32

ஏனம்மா? விக்கிரவாண்டியில் தனித்து நிற்கலாமே யார் தடுத்தார்கள், நீங்கள் மற்றவர்களை சொல்லுமுன் தன நிலைமையை பார்க்கலாம், தைரியம் உண்டா? அல்லது அண்ணாமலை போல வெறும் வாயிற் சவடால் தானா?


MADHAVAN
ஜூன் 18, 2024 10:50

கோவைல வானதி தனியா நின்ன டெபாசிட் கூட வாங்கிருக்க மாட்ட, சும்மா வர பேசாத நீ, உங்க பிஜேபி தனியா நின்னு ஆட்சியைப் பிடிச்சுதா ? இப்பகூட நிதிஷ், நாய்டு...


karutthu
ஜூன் 19, 2024 17:24

மாதவா நீ முதலில் மரியாதையா பேசக்கற்றுக்கொள்ளுங்கள்


Santhakumar Srinivasalu
ஜூன் 17, 2024 20:26

இவங்க மட்டும் கூட்டணி வைக்கலையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை