உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவோடு இரவாக கொலையாளிகள் கைது!

இரவோடு இரவாக கொலையாளிகள் கைது!

'பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை, காவல் துறை இரவோடு இரவாக கைது செய்துள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை, காவல் துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது.வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ