உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூலிப்படை கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்!

கூலிப்படை கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்!

கஞ்சா, மது, போதைப் பொருட்கள் தான், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணம். அதை கட்டுப்படுத்தினால், சட்டம் - ஒழுங்கு ஓரளவு கட்டுப்படுத்தப்படும். அரசுக்கு அது பற்றி கவலை இருப்பதாக தெரியவில்லை. தற்போது, சென்னை மாநகர கமிஷனராக அருணை நியமித்திருக்கின்றனர். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். கூலிப்படை கலாசாரத்தை வேருடன் அறுக்க வேண்டும். கூலிப்படைகளை கட்டுப்படுத்தினாலே, மற்றவைகள் அடங்கி விடும். திருமாவளவன், கள்ளச்சாராய இறப்புகளுக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கேட்டிருக்கிறார். நாங்களும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கேட்டிருக்கிறோம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளில், காவல் துறை பங்களிப்பு, பெரிய அரசியல் புள்ளிகள் பங்களிப்பு இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம். - அன்புமணி,பா.ம.க., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 10, 2024 16:31

கூலிப்படை இல்லையென்றால் கட்சி நடத்தவே முடியாது என்பது தான் விதி திருட்டு திராவிட மடியல் அரசு ஆட்சியில்


Muralidharan S
ஜூலை 10, 2024 13:34

அதற்க்கு முதலில் மாணவ மற்றும் இளைஞர் சமுதாயத்தை சீரழித்துக்கொண்டு இருக்கும் அரசியல் கட்சிகள் அடியோடு வேரறுக்கப்படவேண்டும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை