உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது போதையில் விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி

மது போதையில் விபரீதம் அண்ணனை கொன்ற தம்பி

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., மேல் நங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 45, விவசாய கூலித் தொழிலாளி. இவரது தம்பி சரத்குமார், 35, கார் டிரைவர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சரத்குமார் மற்றும் சக்திவேல் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரத்குமார், தன் கையில் வைத்திருந்த சூரி கத்தியால், தம்பி சக்திவேலை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், கொலை செய்த தம்பி சரத்குமாரை கைது செய்தார். உயிரிழந்த சக்திவேலுக்கும், அவரது தம்பி சரத்குமாருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை