உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்வாகிகள் மூவர் பதவி பறிப்பு; தமிழக பா.ஜ.,வில் அதிரடி

நிர்வாகிகள் மூவர் பதவி பறிப்பு; தமிழக பா.ஜ.,வில் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் இருவர் உட்பட, மூன்று பேரின் கட்சி பதவிகளை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிரடியாக நேற்று பறித்துள்ளார்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஓட்டுகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையிலும், அக்கட்சியின் தோல்விக்கு சுயபரிசோதனை செய்யும் பணிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, லோக்பா தேர்தலுக்கு பின் கட்சியில் புது ரத்தம் பாய்ச்சவும், களையெடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, மூன்று மாவட்ட நிர்வாகிகளின் கட்சி பதவியை பறித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'திருவாரூர் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாஸ்கர்; மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து அகோரம்; திருவாரூர் மாவட்ட பொதுச்செயலர் பதவியில் இருந்து செந்திலரசன் ஆகிய மூவரும் உடனே விடுவிக்கப்படுகின்றனர்' என, கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன், பா.ஜ, விவசாய அணியின் திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர் மதுசூதனனோடு பாஸ்கருக்கு இருந்த முன் விரோதத்தில், மதுசூதனனை சிலருடன் சேர்ந்து பாஸ்கர் வெட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் அகோரம். இது கட்சிக்கு அவப்பெயர் என்பதால், மூவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 08:18

பாஜகவில் நடக்குறதெல்லாம் கவனிச்சா அதுவும் திராவிடம் பேசும் கழகங்கள் போல மாறிக்கிட்டே வருது ன்ற உண்மை புரியுது.. சனங்க அதை புறக்கணிக்க இதுவொரு முக்கியக்காரணம்.. எப்படின்னா திராவிடக் கலாச்சாரத்தைக் காப்பாத்த ஏற்கனவே இரண்டு கழகங்கள் ஒன்னு மாத்தி ஒன்னு இருக்கிறப்ப மூணாவதா எதுக்கு புதுஸ்ஸா ன்னு சனங்க நினைக்கிறாங்க ...


Kumar Kumzi
ஜூன் 27, 2024 08:34

பாஜாகாவில் உன்னை போன்ற கொத்தடிமைகள் இல்லை


s chandrasekar
ஜூன் 24, 2024 16:52

அண்ணாமலை தனித்து முடிவு எடுக்க வேண்டும் .


MADHAVAN
ஜூன் 24, 2024 12:40

ஆமாம், கற்பழிப்பு, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ,இவர்கள் மட்டும் பிஜேபி கட்சியை பற்றி பேச தகுதியானவர்கள்


kulandai kannan
ஜூன் 24, 2024 12:23

தேச பக்தி, தெய்வ பக்திதான் பாஜகவின் அடி நாதம். அது இல்லாதவர்களைத் தவிர்ப்பது கட்சிக்கு நல்லது.


venugopal s
ஜூன் 24, 2024 14:49

இப்படி எல்லாம் சிரிப்பு மூட்டாதீர்கள, பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தையைப் போலவே பேசுகிறீர்கள்!


MADHAVAN
ஜூன் 24, 2024 10:17

சிவா கூறியது உண்மைதான்


Vathsan
ஜூன் 24, 2024 10:05

ராகவுக்கு எதிரா வீடியோ விட்டு நீங்கள் மட்டும் பெரிய ஆளு ஆகலாம். தருமபுர ஆதீனத்துக்கு எதிரா வீடியோ விட்டா கட்சியை விட்டு நீக்கமா. சுப்ரமணிய சாமியை கட்சியை விட்டு நீக்க திரணியிருக்கா?


Sck
ஜூன் 24, 2024 09:58

அண்ணாமலை, இது போல் பல களை எடுப்பு பாஜகவில் செய்ய வேண்டும். நிறைய வெஸ்ட் பேகேஜ் கட்சியில் இருக்கின்றன


Velan Iyengaar
ஜூன் 24, 2024 10:53

மொத்த கட்சி காலி ஆகிடும் .. பரவாயில்லையா ???


Baranitharan
ஜூன் 24, 2024 09:41

கடந்த 3 நாளாக தூங்கி கொண்டு இருந்த உப்பிஸ் எல்லாரும் இங்க வந்து இருப்பானுங்க, கள்ளச்சாராய கோஷ்டிகள்.


evanitha van
ஜூன் 24, 2024 09:32

கஞ்சா கள்ளச் சாராயம் கயமை போன்றவற்றை கொள்கையாக கொண்ட கட்சிக்கு கட்சியினருக்கு பிஜேபி பற்றி பேசக்கூட தகுதி இல்லை


spr
ஜூன் 24, 2024 09:16

பாராட்டத்தக்க முடிவே தலைமைக்கு இந்த அதிகாரம் கூட இல்லையெனில் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்த இயலாது இவர்கள் இப்போது குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் எதிரக்கட்சியுடன் கைகோர்த்து பாஜக தலைமையை விமரிசிப்பார்கள் இதனைத் தவிர்க்க குற்றசாட்டு உண்மையானால், அதன் தீவிரத்தால், முன்னாள் காவற்துறை அதிகாரி என்பதால் ஏதேனும் வழக்கில் உள்ளே தள்ளலாம் இல்லையேல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினாலும் தவறில்லை


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ