உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 தேர்தலில் மும்மொழிக்கொள்கை: பா.ஜ.,வுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!

2026 தேர்தலில் மும்மொழிக்கொள்கை: பா.ஜ.,வுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!

சென்னை: ''மும்மொழிக் கொள்கையை மையமாக கொண்டு வரும் 2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.,வுக்கு சவால் விடுகிறேன்,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மரங்கள் அமைதியை விரும்பினாலும், காற்று ஒருபோதும் சும்மா இருப்பதில்லை.நாம், நம் பணியை மட்டும் செய்து கொண்டிருந்தபோது, மத்திய கல்வி அமைச்சர் தான் நம்மை துாண்டி விட்டு தொடர் கடிதங்களை எழுத வைத்தார். அவர் தன் இடத்தை மறந்து விட்டார். ஹிந்தி திணிப்பை ஏற்கும்படி ஒரு மாநிலத்தையே அச்சுறுத்த துணிந்தார். தன்னால் வெற்றி பெற முடியாத ஒரு போரை துாண்டியதற்கான எதிர்விளைவை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார். தேசிய கல்வி கொள்கையில் உள்ள பெரிய முரண்பாடு என்னவென்றால், இதனை நிராகரிக்கும் தமிழகம், இதன் இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது. இந்தக் கொள்கை 2030க்கென இலக்கை நிர்ணயித்துள்ளது. இது ஒரு எல்.கே..ஜி., மாணவர் முனைவர் பட்டம் பெற்றவருக்கு அறிவுரை வழங்குவது போல் உள்ளது. திராவிடம், டில்லியின் உத்தரவுகளை ஏற்காது. மாறாக நாடு பின்பற்ற வேண்டிய பாதைகளை உருவாக்குகிறது.தற்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ, நடத்தும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. அவர்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மும்மொழிக் கொள்கையை மையமாக கொண்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என சவால் விடுகிறேன். அது ஹிந்தி திணிப்பு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக அமையட்டும். வரலாறு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் ஹிந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தி.மு.க.,வுடன் இணைந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு பதிலாக ஹிந்தி காலனித்துவத்தை தமிழகம் சகித்துக் கொள்ளாது. திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கான விருதுகள் வரை, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் வரலாம்; போகலாம். ஆனால், இந்தியாவில் ஹிந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு பல காலம் கழிந்த பிறகும், அதற்காக முன்னணியில் நின்றது தமிழகம் தான் என்பதை வரலாறு நினைவில் வைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

SIVA
மார் 13, 2025 15:22

ஆர் கே நகர் இடை தேர்தலில் நீங்கள் பணம் செலவழிக்க வில்லை , அதில் குறிப்பிட்ட ஒரு வார்டில் உங்க கட்சி பத்து ஒட்டு கூட வாங்க வில்லை , இது தான் உங்க கட்சியின் நிலை , உங்க கட்சிக்காரர்களே நீங்கள் பணம் கொடுக்க வில்லை என்றால் உங்களுக்கு ஓட்டு போட மாற்றார்கள் , சென்னை உங்கள் கோட்டை என்பீர்கள் , அதிலே இவ்வளுவு ஓட்டை ......


பேசும் தமிழன்
மார் 08, 2025 08:48

விடியல் அய்யா பார்த்து.... உங்கள் வீட்டு பிள்ளைகள்.... மற்றும் இரு மொழி மட்டும் தான் படிக்க வேண்டும் என்று கூறும் ஆட்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்.... அவர்கள் மட்டும் படிக்கும் போது.... ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் மட்டும் படிக்க கூடாதா என்று ஒரே கேள்வி கேட்டு.... உங்களை ஒன்றும் இல்லாமல் செய்து விட போகிறார் !!!


S.jayaram
மார் 08, 2025 08:19

ஒரு சிறு திருத்தம் நீங்கள் கூறும்படியே தேர்தலை சந்திக்கலாம், அதற்கு முன்னர் உங்களுக்கு உண்மையில் தில் இருக்குமானால் தமிழ்நாட்டில் இருமொழிக்கொல்கைகள் கடைபிடிக்கப்படு வதால் வரும் கல்வியாண்டு முதல் மத்திய, மாநிலக் கள்விதிட்டங்களில் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் இருமொழிக்கொள்கை மட்டுமே கடை பிடித்து பள்ளிகளை மேற்கொண்டு நடத்தலாம் இல்லையேல் அவற்றை அரசுடமையாக்க தமிழ்நாடு அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அவசர சட்டத்தை இக்கூட்டத்தொடரில் போட்டுவிட்டு பின்னர் தேர்தலை சந்திக்கலாம். ஏன் தமிழ்நாட்டை கெடுக்கும் டாஸ்மாக் வேண்டுமா? வேண்டாமா? என்று கருத்தை முன் வைத்து தேர்தலை சந்திப்போமா? நீட் இரத்து ரகசியத்தை வைத்து தேர்தலை சந்திக்கலாம் மாதாமாதம் மின்கட்டண கணக்கெடுப்பு பற்றியும் கூட முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தலாம்


Subburamu Krishnasamy
மார் 08, 2025 07:45

Our country need election reforms. All the recognised political parties must contest all the seats without any alliance. In our state 234 MLAs may be elected based on their success in individual seats. The assembly seats may be enhanced by 50 percent that is 117 members. For these seats political parties may naminate their party cadres based on the votes earned by them proportionately. However for such seats already lost candidates in the public elections should not be nominated


மாயவரம் சேகர்
மார் 08, 2025 00:21

நன்றாக திசை திருப்புகிறார். திமுக ஆட்சியில் ஊழல் லஞ்சம் கொள்ளை கட்சியினர் அராஜகம் நிர்வாக குளறுபடி வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல விஷயங்கள் ஆட்சிக்கு மிக கெட்ட பெயர் .அதனால் மும்மொழி கொள்கை மட்டும் பற்றி பேசினால் , நன்றாக மக்களை ஏமாற்றலாம். பாஜக தொடர்ந்து திமுக ஊழல்களை மக்கள் விரோத போக்கை விடாமல் பேசி மக்களிடம் பாஜக நல்லாட்சிக்கு வாக்கு கேட்க வேண்டும்.


SVR
மார் 07, 2025 22:37

இதெல்லாம் ஒன்றும் வேண்டாம். விட்டு தள்ளுங்கள். ஹிந்தி வேண்டாம் என்றால் என்னத்துக்கு கரன்சி நோட்டுக்களை தமிழ்நாட்டிலே புழங்க விட்டு வைத்திருக்கிறார்கள் இந்த திராவிட அரக்கர்கள்?


orange தமிழன்
மார் 07, 2025 22:14

முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.......1. கள்ள சாராயத்தை ஒழித்தேன்..2 பாலியில் குற்றங்களை ஒழித்தேன்...3. லஞ்சத்தை முற்றிலும் ஒழித்தேன். 4. டாஸ்மாக்கை ஒழித்தேன்....5. மக்கள் நிம்மதியாக இருக்க முற்றிலும் ரவுடிகளை ஒழித்தேன்....6.. உண்மையான மத சார்பற்ற ஆட்சியை நடத்தி காட்டியவன் என்று மேலே குறிப்பிட்டதில் ஏதாவது இரண்டை சொல்லி மன சாட்சியுடன் வாக்கு கேட்க முடியுமா.....இன்னும் ஒரு வருடம் இருக்கிறது தயவு செய்து இதை நடத்தி காட்டுங்கள்...அப்படி செய்தீர்கள் என்றால் மக்கள் தாங்களாகவே உங்களுக்கு ஒட்டு போடுவார்கள்.....


தாமரை மலர்கிறது
மார் 07, 2025 22:11

சுப்ரிம் கோர்ட்டில் மும்மொழி வழக்கு வந்துள்ளது.விரைவில் நீட் மாதிரி அனைத்து அரசு பள்ளி குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று கண்டிப்பாக மத்திய அரசின் கொள்கைக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரவேண்டி இருக்கும். அப்போது ஏழை குழந்தைகள் ஹிந்தி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வங்கித்துறை, ரயில்வே துறை, மின்னுற்பத்தி துறை, பாஸ்போர்ட் துறை, ஏற்றுமதி இறக்குமதி என்று பற்பல துறைகளில் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தமிழ் இளைஞர்களுக்கு ஹிந்தி தெரிந்தால் மட்டுமே கிடைக்கும். அதனால் ஹிந்தி அவசியம். சீனாவில் அனைவரும் ஒரு மொழியை கற்றதால் தான் இன்று சீனா வளர்ச்சி அடைந்தது. ஹிந்தி கற்காவிடில், தமிழகத்தின் நிதி பாதியாக குறைக்கப்படும்.


நிக்கோல்தாம்சன்
மார் 07, 2025 21:09

முதல்வரே , ஒரு பத்து நிமிடம் விடாமல் தமிழிலேயே பேசணும் , முடியுமா ?


Ray
மார் 07, 2025 20:37

ஒன்றிய அரசின் மூன்றாவது அலுவல் மொழியாக தமிழை அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை