உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய வாக்குறுதியை தூசு தட்டிய உதயநிதி

பழைய வாக்குறுதியை தூசு தட்டிய உதயநிதி

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி: ஆட்சியமைத்த போது, பெரிய நிதி நெருக்கடி இருந்தது. இருப்பினும், மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து, காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினோம். 'மகளிர் உரிமை தொகை' திட்டத்தில், ஒரு சில குறைபாடுகள் உள்ளன. தேர்தல் முடிந்த பின், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும், மகளிர் உரிமை தொகை திட்டம் சென்றடையும்.டவுட் தனபாலு: 'எல்லா பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை' என வாக்குறுதி தந்துட்டு, அதை தரும்போது, ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் விதிச்சு, பலரை கழற்றி விட்டதை, யாரும் இன்னும் மறக்கலை... அவங்களை தாஜா செய்யவே பழைய வாக்குறுதியை துாசு தட்டுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு:

பிரதமர் மோடியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதுாறாக பேசியது தொடர்பாக பா.ஜ., சார்பில் அளிக்கப்பட்ட புகார், டில்லி தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாக விசாரித்து அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.டவுட் தனபாலு: நீங்க புகாரை, டில்லிக்கு, 'பார்வர்டு' பண்ணிட்டீங்க...மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ற அறிக்கையையும் டில்லிக்கு தான் அனுப்புவீங்க... அவங்க அதை ஆய்வு பண்ணி, அனிதா ராதாகிருஷ்ணன் மேல நடவடிக்கை எடுக்கிறதுக்குள்ள தேர்தலே முடிஞ்சுடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

ம.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி:

ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை. கூட்டணி பேச்சு, தேர்தல் அறிவிப்பு துவங்கி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட ஆலோசனைக்கு கணேசமூர்த்தியை அழைக்கவில்லை. என்னதான் சங்கடங்கள் இருந்தாலும், வைகோ ஒரு முறை கூப்பிட்டு பேசி, சமாதானம் செய்திருந்தால், கணேசமூர்த்தி இப்படியொரு முடிவு எடுத்திருக்க மாட்டார்.டவுட் தனபாலு: வைகோவை நம்பி வந்த பலரும் இப்படி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க... லோக்சபா தேர்தல் முடிஞ்சதும், ம.தி.மு.க.,வுல வைகோவும், அவர் மகனும் தான் இருப்பாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
மார் 27, 2024 13:11

நீங்கள் எதுக்கும் தயங்க வேண்டாம் இளவரசே நீங்கள் எந்த வாக்குறுதியை கொடுத்தாலும் முட்டாள் தமிழக மக்கள் நம்புவார்கள்


Mani . V
மார் 27, 2024 12:45

நீங்கள் எதுக்கும் தயங்க வேண்டாம் இளவரசே நீங்கள் எந்த வாக்குறுதியை கொடுத்தாலும் முட்டாள் தமிழக மக்கள் நம்புவார்கள்


VENKATASUBRAMANIAN
மார் 27, 2024 08:11

இன்னுமா இவர்களை நம்புகிறீர்களா திமுக மதிமுக இரண்டும் ஒன்றே பாவம் போஸ்டர் ஒட்டும் தொண்டர்கள்


Mani . V
மார் 27, 2024 07:16

நீங்கள் எதுக்கும் தயங்க வேண்டாம் இளவரசே நீங்கள் எந்த வாக்குறுதியை கொடுத்தாலும் முட்டாள் தமிழக மக்கள் நம்புவார்கள்


pandit
மார் 27, 2024 06:54

தாத்தா காலத்து உருட்டு தொடர்கிறது


Kasimani Baskaran
மார் 27, 2024 05:31

தீம்காவின் வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் வாங்கிய காசுக்கு விசுவாசமாக விழும் ஓட்டுக்களை நிஜமான தீம்கா ஓட்டாக கற்பனை செய்வது தோல்வியில் கூட முடிய அதிக வாய்ப்புண்டு சென்னை வாசிகள் தீம்கா வெள்ளத்தை கையாண்ட விதத்தை வைத்து பார்த்து ஓட்டுப்போட வேண்டும் பல பிரிவுகள் காண்டில் இருக்கிறார்கள் அவர்கள் கண்டிப்பாக தீம்காவுக்கு ஓட்டுப்போடப்போவது இல்லை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை