உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரன் பெயரில் மது டாஸ்மாக்கில் அறிமுகம்

வீரன் பெயரில் மது டாஸ்மாக்கில் அறிமுகம்

சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர்; 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும் கொள்முதல் செய்கிறது. 'குடி'மகன்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக, 15 பிராண்டில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.அதன்படி, தற்போது, 'ஆர்டினரி' எனப்படும் சாதாரண வகை பிரிவில், 'வீரன்' என்ற புதிய வகை மது, 'குவார்ட்டர்' பாட்டிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, 140 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ