உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதி

திருப்பூர்:கடந்த நிதியாண்டில் சரிவில் இருந்த ஜவுளி ஏற்றுமதி, தற்போது அதிகரித்துள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 11,320 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. பருத்தி நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள், கைவினை ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி கடந்தாண்டு மே மாதம், 7,574 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு மே மாதம், 8,420 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஏப்., - மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும், 16,316 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.நீண்ட நாட்களாக சரிவில் இருந்த செயற்கை நுாலிழை துணி ஏற்றுமதியும், 5.99 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, 3,256 கோடி ரூபாயாக இருந்தது, இந்தாண்டு மே மாதம், 3,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏப்., - மே மாதங்களில், 6,523 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், “அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் சீரானதும், நம் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் சீராகி விட்டது. “பஞ்சு, நுால் விலை சீராக இருப்பதால், இனிவரும் மாதங்களிலும், பருத்தி ஆடை மற்றும் செயற்கை நுாலிழை ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை