உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார்; கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய், 45 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, 'தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பிறக்குது' என்ற கொள்கை விளக்க பாடலையும் வெளியிட்டார். கொடியின் மேலேயும், கீழேயும் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளன. மஞ்சளின் நடுவே வாகை பூவும், அதை சுற்றி 23 சிறிய நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. வாகை பூவின் வலது மற்றும் இடது பக்கத்தில், பிளிரும் போர் யானைகள் உள்ளன.கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில், 'என்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.விழாவில் விஜய் பேசியதாவது:கட்சியின் முதல் மாநாட்டு தேதியை விரைவில் அறிவிப்பேன். மாநாட்டில் கட்சிக் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பேன். கொடிக்கு பின்னால், ஒரு வரலாற்று தொடர்ச்சி 5ம் பக்கம்

'மக்கள் சேவகனாக இருப்பேன்'

தொண்டர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட உறுதிமொழி:நாட்டின் விடுதலை, மக்கள் உரிமைகளுக்காக, தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம் அன்னை தமிழ் மொழியை காக்க, உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கும் பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகனாக கடமை ஆற்றுவேன். ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன்.இவ்வாறு உறுதிமொழி ஏற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

angbu ganesh
ஆக 23, 2024 11:03

ஹாஹா சூப்பர் போங்க நீங்களும் கேவலமான arasiaylum


AMLA ASOKAN
ஆக 23, 2024 08:52

சிலருக்கு கெட்டகாலம் தானாக வரும் . சிலர் அதை விரும்பி செல்வதும் உண்டு . நீந்தத்தெரியாமல் குளத்தில் குதிப்பது ஒருவனது விருப்பம் . 7 கோடி மக்களில் 7 லட்ச ரசிகர்களை வைத்துக்கொண்டு தன்னை முன்னிலை படுத்த கட்சி ஆரம்பிப்பதும் , முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதும் ஆடம்பர வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு . அரசியல் பின்புலம் , அறிவாளிகளுடன் உறவு , அரசியல் தலைவர்ககளுடன் சந்திப்பு , மேடை பேச்சுத் திறமை . அரசியல் , பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போன்ற சரித்திரம் எதுவும் இல்லை . பல கோடி ஆடம்பர கார்கள், சொகுசு பங்களாக்களில் வாழ்க்கை வாழ்வது , மழை, புயல் , வெள்ள கடும் பாதிப்புகளின் போது சாமானியனின் துயரங்களை கண்டுகொள்ளாதது , மக்களிடம் இருந்து 20 அடி தள்ளி நின்று கையை ஆட்டிவிட்டு போவது அவரது வாடிக்கை . இவை அனைத்தும் பொதுவெளியில் வெட்ட வெளிச்சம் . மக்களை முட்டாளாக நினைப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் . எந்த கொடியும் காற்றில் பறக்கத்தான் செய்யும் . ஆனால் கொடிமரம் இரண்டு யானைகளையும் தாங்கும் வலுவுள்ளதா என்பது ஆச்சரியம் கலந்த அதிசயம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ