உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஷால் - லைகா சமரசம்

விஷால் - லைகா சமரசம்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில், 'சண்டக்கோழி - 2' படம் தயாரிக்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமைக்காக, லைகா நிறுவனத்துடன், 2018ல், 23.21 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லைகா, 12 சதவீத ஜி.எஸ்.டி.,யை செலுத்தாததால் அபராதத்துடன், 4.88 கோடி ரூபாயை செலுத்தினேன். தற்போது வட்டியுடன் சேர்த்து, 5.24 கோடி ரூபாயை எனக்கு செலுத்த, லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது சமரச பேச்சுக்காக மத்தியஸ்த மையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சமரசம் ஏற்பட்டதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை முடித்து வைத்து, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ