உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டியில் இன்று ஓட்டுப்பதிவு

விக்கிரவாண்டியில் இன்று ஓட்டுப்பதிவு

சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு நிறைவு பெறும். தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக போலீசாருடன், மூன்று கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில், 276 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடப்பதை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் தங்கள் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க, 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்பட்டுள்ளன.வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 13ம் தேதி நடக்கிறது. அதுவரை ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைக்கு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nagendran,Erode
ஜூலை 10, 2024 04:30

விக்கிரவாண்டியில் ஓட்டை விக்கிறவய்ங்களின் தேர்தல்..


Yes
ஜூலை 10, 2024 04:10

ராஜீவ் காந்தி பதினெட்டு வயசு சில்லரை சின்ன பசங்களுக்கு வாக்குரிமை கொடுத்ததால் இந்திய ஜனநாயகம் படு குழியில் தள்ளப்பட்டுள்ளது.


Yes
ஜூலை 10, 2024 04:04

அடேய் பதினெட்டு வயது நல்லவன் கெட்டவன் தெரியாத வயது சின்ன பசங்களே உங்கள் வாக்குகளை சரியான ஆளா பாத்து போடுங்க டா.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி