உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகள் படிப்பு செலவை ஏற்கிறோம்: நிர்மலா புகாருக்கு காங்., பதில்

குழந்தைகள் படிப்பு செலவை ஏற்கிறோம்: நிர்மலா புகாருக்கு காங்., பதில்

சென்னை: “கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள்; பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் ஏற்கும் என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், முன்னாள் தலைவர் ராகுலும் தொலைபேசியில் கூறினர்,' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்திபவனில் அவர் அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இதுவரை, கார்கேயும், ராகுலும் பேசவில்லை என, நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்றைய தினம், கார்கே, ராகுல் இருவரும் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டனர். பாதிக்கப்பட்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தேவையான உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர். பெற்றோரை இழந்த, 45 குழந்தைகளின் படிப்பு செலவை, காங்கிரஸ் ஏற்கும் என, அறிவிக்கும்படி கூறினார்.கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சட்டசபை மற்றும் மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் போராடி வருகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணை நடத்த இயலாது. இந்த அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இருக்கிறார். மலிவான அரசியல் மேற்கொள்வதில் முதன்மையானவர் அண்ணாமலைதான்.போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை. அதற்கான அனுமதியை போலீஸ் துறைதான் வழங்க வேண்டும். அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து, சட்டசபையில் பேசுவேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.முன்னதாக, வருமானவரித்துறையின் முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலமுருகன், செல்வப்பெருந்தகை முன்னிலையில், நேற்று காங்கிரசில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

konanki
ஜூன் 26, 2024 01:15

திராவிட முன்னேற்றக் காங்கிரஸ் இது. கள்ள சாரயத்துக்கு துணை போகும் காங்கிரஸ் இது.காமராஜ் பேரை சொல்றத்துக்கூட அருகதை அற்ற கயவர் கும்பல்


konanki
ஜூன் 26, 2024 01:13

அறிவிக்க ராகுல் சொன்னாரு சரி. செல்வ பெருந்தொகை ஏன் அறிவிக்கவில்லை? பணத்தை காங்கிரஸ் ஆட்டைய போட்ருச்சா??


M Ramachandran
ஜூன் 25, 2024 12:42

நீங்களெல்லாம் பேச அருகதை அற்றவர்கள். ராகுல் காந்திக்கு ஜால்றா தட்டுவதுடன் அப்புறம் கப் சிப். இவ்வளவு களைய பாராம் கள்ளக்குறிச்சியில் நடந்து கொண்டிருக்கு. ஒரு சின்ன எதிர்ப்பு கூடா தெரிவிக்காததற்கு என்ன சொல்ல வறீங்க? தொல் திருமா வளவனாவது கண்டன கூட்டம் நடந்துகிறார்? உத்தரவு ராகுல் கொடுக்கும் வரை வாயைய் திரைப்பதில்லை என்று கங்கனம் கட்டி கொண்டிருக்கிறீர்களா?


jaya
ஜூன் 25, 2024 11:41

அறிவிப்பு எல்லாம் விளம்பரத்துக்குத்தானே , உண்மையில் ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள் .


RAJ
ஜூன் 25, 2024 10:39

சார், ஓரமா போய் காமெடி பண்ணுங்க


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 10:24

கள்ளக்குறிச்சி மரணங்களில் பாதிக்கப்பட்டது எந்தச் சமூகம்? செல்வப்பெருந்தகை அவர்கள் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்? பொங்கியிருக்க வேண்டாமா? இந்த வாரம் துக்ளக்கில் வந்த அட்டைப்பட கார்ட்டூன் சரியாகவே சித்தரித்திருக்கிறது ......


R RAMAKRISHNAN
ஜூன் 25, 2024 10:11

மொதல்ல ஸ்கூல்ஸ் இருக்கானு பாருங்க அப்புறம் படிப்பு செலவை பாக்கலாம் you tube ல வக்கீல் இன்டெர்வியூ பார்க்கவும் அப்புறம் பேசவும் அதை பார்த்தபின் எந்த அரசியல்வாதிக்கும் கள்ளக்குறிச்சி பற்றி பேச அருகதையில்லை அவர் பிரச்சனையை சொல்லி தீர்வும் சொல்லியிருக்கிறார்


Ramalingam Shanmugam
ஜூன் 25, 2024 09:56

செல்வ பெருந்தொகை ரொம்ப பேசுறீங்கன்னு சொன்னாங்க


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 25, 2024 09:56

பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச சத்துணவு, இலவச புத்தகங்கள் நோட்டுகள், இலவச சைக்கிள் இலவச மடிக்கணினி எல்லாமே அரசாங்கம் கொடுக்குது. இத்தனைக்கும் அப்பால அவங்க குச்சி மிட்டாய் பலூன் வாங்கற செலவுகளை மட்டும் நீங்க ஏத்ததுப்பீங்களா கோப்பால்?


NATARAJAN R
ஜூன் 25, 2024 11:20

இவர் கேள்வி புரியாது போல நடிக்கிறார். காங்கிரஸ் கட்சி கள்ளச்சாராய சாவுக்கு இதுவரை ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது கேள்வி. அதற்கு இவரிடம் பதில் இல்லை. மிகப்பெரிய அவலம். தமிழகத்தில் நடந்திருக்கிறது. அதுவும் அரசின் அலட்சியப் போக்கால். இதை கண்டிக்க வேண்டியது காங்கிரஸின் தலைமை. ஆனால் அவர்கள் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள் . காரணம் எல்லோருக்கும் தெரிந்தது.


Karthikeyan
ஜூன் 25, 2024 09:43

யோவ் ...நீ படிப்பு செலவை ஏத்துக்கிறது ஒருபுறம் இருக்கட்டும்... கள்ளக்குறிச்சியில கள்ளச்சாராயம் ஆறாக பெருகி ஓடுன உண்மைய ஏன் ஒத்துக்கிட மாட்டேன்கிற... நீங்க, வைகோ, கம்யூனிஸ்ட், திருமா மற்றும் ம நே ம கட்சித் தலைவன் ஜபகிருல்லா எல்லாரும் இப்ப எங்க போனீங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை