உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பல்லோவில் ஜெ., இருந்த நாட்களில் நடந்தது என்ன?

அப்பல்லோவில் ஜெ., இருந்த நாட்களில் நடந்தது என்ன?

சென்னை: தனியார் மருத்துவமனை யில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாட்களில் நடந்தது குறித்து, நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், காய்ச்சல் மற்றும் நீரிழப்பு சிகிச்சைக்காக, 2016 செப்., 22ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5ல் மரணம்அடைந்தார். சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால், உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, அ.தி.மு.க.,வை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய முதல் அமர்வு இரு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JeevaKiran
ஜூலை 19, 2024 13:34

இத்தனை கருது வேறுபாடுகள் உள்ளது. போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை. கருப்பு பூனை கமாண்டோ படைகள் என்ன செய்தார்கள். இது போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. கமாண்டோ படைகளை விசாரிக்கவே இல்லையே?


MADHAVAN
ஜூலை 16, 2024 11:19

இட்லி சாப்பிட்டாங்க, ஜூஸ் குடிச்சாங்க,


W W
ஜூலை 16, 2024 08:45

உண்மை கடவுளுக்கு மட்டுமே தெரியும் ,அந்த கடவுள் தான் தக்க தண்டனையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்குவார். Let us wait & see .


shyamnats
ஜூலை 21, 2024 08:49

கடவுளும் பார்த்து கொள்வார், பின் ஏன் காவல்துறை, வெவ்வேறு விசாரணை அமைப்புகள் சி பி ஐ நீதிமன்றம் போன்றவைகள். தமிழ் நாட்டின் ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், பின் சாதாரண மனிதனின் நிலைமை எப்படி இருக்கும் ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை