உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எளிமையை பறைசாற்ற வேண்டிய இடத்தில் பட்டு சேலைகள் விற்பனை எதற்கு?: கேட்கிறார் நீதிபதி பரத சக்ரவர்த்தி

எளிமையை பறைசாற்ற வேண்டிய இடத்தில் பட்டு சேலைகள் விற்பனை எதற்கு?: கேட்கிறார் நீதிபதி பரத சக்ரவர்த்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எளிமையை பறைசாற்றும் காதி மையங்களில், பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. தச்சுத் தொழிலில் பயிற்சி பெற்ற தேவராஜ், சுரேஷ் ஆகியோர் காதி வாரியத்தில் பணியாற்றுகின்றனர். இருவரையும் பட்டு சேலை விற்பனை பிரிவுக்கும், சோப், தேன், விற்பனை பதிவேட்டை பராமரிக்கும் பிரிவுக்கும் மாற்றி உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் பள்ளி படிப்பை படிக்காதவர்கள் என்பதால், விற்பனை பிரிவை தங்களால் நிர்வகிக்க முடியாது என, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:குறிப்பிட்ட பணியில் நிரந்தரம் செய்யப்பட்ட இவர்கள், அதே பணியில் தொடர உரிமை உள்ளது. இவர்களுக்கு முறையான கல்வியும் இல்லை. மற்ற மாவட்டங்களில், தச்சுப் பிரிவுகள் இயங்குகின்றன. சென்னையில் இவர்களுக்கு பணி ஒதுக்க முடியவில்லை என்றால், மற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யலாம். எனவே, விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சென்னை அல்லது வேறு இடங்களில் உள்ள தச்சுப் பிரிவில் பணி அமர்த்தலாம். எளிமை, பாரம்பரியத்தை பறைசாற்ற, காதி உருவாக்கப்பட்டது; ஆனால், ஆடம்பரம், பகட்டின் குறியீடாகத் திகழும் பட்டு சேலைகள், காதியில் விற்பனை செய்யப்படுகின்றன. காதி விற்பனை மையம் பலவற்றில் இப்போதெல்லாம் காதி துணிகள், கிராம தொழிற்சாலைகளில் தயாராகும் பொருட்களை விற்பனை செய்வதில்லை. இந்த உத்தரவின் நகலை, காதி வாரியத்துக்கு அளிக்க வேண்டும்; அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Srinivasan H
ஜூலை 18, 2024 17:22

காதி நிறுவனம் அழியும் நிலையில் உள்ள கைவினை பொருட்களை சிரமமின்றி விற்பனை செய்வதற்கு உதவ ஆரம்பிக்கப்பட்டது. அதில் பட்டு நெய்தலும் அடங்கும். இது தெரியாமல் கருத்து தெரிவிப்பது தவிக்கப்பட வேண்டியது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 18, 2024 18:12

மன்னிக்கவும் நண்பரே. காதியில் விற்கப்படும் பட்டு பெரும்பாலும், நூறு சதவீதம் என்று கூட சொல்லலாம், விசைத்தறிகளில் நெய்யப்பட்டவையே. அதுமட்டுமின்றி, இன்றைய காதி அங்காடிகள் டிபார்ட்மென்டல் ஸ்டோர் போலவே அனைத்து பொருட்களை வெளி மார்க்கெட்டில் இருந்து வாங்கி வணிகம் செய்கின்றன..


Arul Narayanan
ஜூலை 18, 2024 14:14

தெரியாத விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பதை நீதிபதிகள் தவிர்த்தல் நல்லது.


ponssasi
ஜூலை 18, 2024 10:51

அது ஒரு வியாபாரம் நடக்குமிடம். அணைத்து விதமான துணிகளையும் காட்சிப்படுத்தினால்தான் நுகர்வோரை ஈர்க்கமுடியும். எழும்பூரில் அமைத்துள்ள தில்லையாடி வள்ளியம்மை காதி நிறுவனத்துக்கு சென்றேன், மிகப்பெரிய கடையில் வாடிக்கையாளரை விட விற்பனையாளர் அதிகம். ஒரு நாள் ஐந்து லட்சம் விற்பனை நடப்பதாக தெரிவித்தனர். இது தனியார் வசம் இருந்தால் நாள் ஒன்றுக்கு பல லட்சம் விற்பனை நடக்குமிடம் இது. அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவை ஈடுசெய்கிறது. அதில் வரும் வருமானம் வாடகை / ஊதியம் / மின்சாரம் இதற்கே சரியாக இருக்கும். கொள்முதல் விளம்பரம் இதர செலவுகள் அனைத்தும் மக்கள் தலையில்தான்.


duruvasar
ஜூலை 18, 2024 09:46

எசமான் கடவுளை தரிசிக்க எதற்க்கு விதவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என கேட்டு இந்து அளவில்லாத துறைக்கும் நோட்டீஸ் அனுப்பினால் புண்ணியமாக போகும்.


Guruvayur Mukundan
ஜூலை 18, 2024 08:54

Exactly. What you said is absolutely correct.


GMM
ஜூலை 18, 2024 07:24

பட்டு சேலை, கைத்தறி துணிகள் நெசவாளர்கள் கைத்தறியில் உற்பத்தி செய்யப்படுவது. மர சாமான்கள், கதர், படம், பனை பொருட்கள்... இயந்திரம் இல்லாமல் சமூக மக்களால் உற்பத்தி செய்ய படுவது. இந்த சமூகங்கள் தொழில் தர்மம் கடைபிடிப்பவை. இவர்களை அரசியல் ஒடுக்கிவிட்டது. சுத்தபட்டு இயந்திரத்தில் உற்பத்தி செய்ய முடியாது? காதியில் விற்பனை செய்ய வேண்டிய பொருளில் பட்டும் ஒன்று.


Subramanian
ஜூலை 18, 2024 06:19

Now a days it is fashion for judges to pass comments not related to the case. Only the transfer case has come to him. Why he should comment about which product they should sell. Does he know how many persons it provides livelihood. Judges should stop upto their cases only and stop unnecessary comments on other aspects


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:18

கிராம உள்கட்டமைப்புக்கள் மூலம் கையால் நெய்யப்பட்ட பட்டுக்கு என்ன குறை? தமிழகத்தின் பாரம்பரிய அடையாளம். அதை முடக்க முயல்வது தவறான முடிவு.


சமீபத்திய செய்தி