| ADDED : ஜூலை 02, 2024 04:49 AM
மூங்கில்துறைப்பட்டு: கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன் மண்டையை உடைத்த மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு,38; இவரது மனைவி சுகந்தி,30; திருமணமாகி 15 ஆண்டாகும் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.வெளிநாட்டில் வேலை செய்து வந்த பிரபு, 40 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். அப்போது சுகந்திக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதை அறிந்து, சுகந்தியை கண்டித்தார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சுகந்தி, அவரது தந்தை செல்வம்,55; தாய் சுமதி,48; அண்ணன் அறிவழகன்,23;ஆகியோர் சேர்ந்து பிரபுவை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து சுகந்தி, சுமதி ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.