உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பில் சேரலாம்

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பில் சேரலாம்

சென்னை: சென்னை தரமணியில் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இதில், தஞ்சை தமிழ் பல்கலையின் பாடத்திட்டத்தில், எம்.ஏ., தமிழ் மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.ஏ., என்ற முதுகலை பட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், முனைவர் பட்டமான, பி.எச்டி.,யும் பெற முடியும்.இந்தாண்டு இந்த படிப்புகளில் சேர விரும்புவோர், www.ulakaththmizh.inஎன்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அடுத்த மாதம் 7ம் தேதிக்குள், 'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 113' என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது தபாலில் அனுப்பலாம்.இதில், சேரும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக இலவச தங்கும் விடுதி வசதி உள்ளது. படிப்புக்கும் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ