உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மாணவர்களை குறிவைத்து, ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s4penah7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மற்றும் கூட்டாளிகள் நான்கு பேர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஓட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில், 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றினர். ஜாபர் சாதிக் வீட்டில், மேலும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக், லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், சென்னையில் தங்கி படிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு புரோக்கர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சங்கங்களின் நிர்வாகிகள் செயல்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

skv srinivasankrishnaveni
ஏப் 25, 2024 12:09

ஒரே வலிப்லேஸ் நடுத்தெருவில் வச்சு சுட்டுத்தள்ளவேண்டும் தப்பே இல்லீங்க ஒருபுறம் திமுகவின் டாஸ்மாக் மறுபுறம் இந்த மாதிரி குப்பைகளின் பணவெறி ஒரு பைசா விடாமல் பிடுங்கிண்டு சுட்டுத்தள்ள வேண்டும் ப்ளீஸ் இரக்கம் கருணை ஏதும் வேண்டவே VENDAAM


Jeya K
ஏப் 25, 2024 11:08

தேசத்துரோகி பண ஆசையினால் மனசு செத்துப் போச்சு எத்தனை வாலிபப் பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தையே தொலைச்சிட்டு நிக்கிறாங்க திருந்துங்கடா படுபாவிகளா


Lion Drsekar
ஏப் 24, 2024 13:44

அரசாங்கம் சாராயம் எதினால் தயாரிக்கப்படுகிறது இதனால் ஏத்தினாள் லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் தாயாரிப்பவர்கள் யார், விற்பது அரசாங்கம் போதை என்றால் சாராயமும் அடக்கம் வந்தே மாதரம்


Yaro Oruvan
ஏப் 24, 2024 13:35

என்னங்க நீங்க இதுவா முக்கியம்?? லோகோ கலர் மாத்தீட்டாங்க அத பாருங்க சிறுபான்மை பாதுக்காக்கோணும் பா ஜ கா உள்ள வந்துரும் போதையாவது கீதையாவது மொதல்ல லோகோவை பாக்கணும்


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 12:21

மது முதல் மெத் வரை எல்லா போதைப்பொருள் வணிகங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை 21 ம் பக்க ஆட்சிக்கே உண்டு.


A1Suresh
ஏப் 24, 2024 12:15

கூடிய விரைவில் போதைபொருளுக்கு சட்ட அங்கீகாரம் தந்த நெதர்லாந்து போல நமது பாரதமும் குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, மஹாராஷ்டிர மாநிலங்கள் மாறும்


அசோகன்
ஏப் 24, 2024 12:08

இதுதாண்டா திராவிட மாடல் ஆட்சி...... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்க


GANESUN
ஏப் 24, 2024 11:35

ஐ டி விங் வெரி பிஸி, எதையாவது செஞ்சி திசை திருப்ப


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 11:32

சேட் முதல் சாதிக் வரை திமுக வுக்கு பல தலைவலிகள்.


shyamnats
ஏப் 24, 2024 11:23

இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் பொருள் பின்னர் பொன்முடி வழக்கு போல, பிறழ் சாட்சிகளால் ஒன்றுமில்லாமல் ஆகி விட கூடாது மாணவர்கள் அதாவது வளரும் தலைமுறையினருக்கு எதிரான குற்றங்களை மிக கடுமையாக கையாள வேண்டும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை முறையாக அடைத்து குற்றவாளிகளை விரிவாக தண்டிக்க வேண்டும் அரசியல் வாதிகளின் தலையீடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை