உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதிக்கு 100 பேர் பிரசாரம் சங் பரிவார் அமைப்புகள் திட்டம்

தொகுதிக்கு 100 பேர் பிரசாரம் சங் பரிவார் அமைப்புகள் திட்டம்

சென்னை:லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்காக வீடு வீடாகப் பிரசாரம் செய்ய சட்டசபை தொகுதிக்கு தலா 100 பேரை முழுநேரமாக ஈடுபடுத்த ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., இந்து முன்னணி, ஏ.பி.வி.பி., பாரதிய மஸ்துார் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.ஆனால், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் பா.ஜ,வுக்காக, 1950 முதல் பிரசாரம் செய்து வருகின்றன. சங் பரிவார் அமைப்புகளின் ஆர்ப்பாட்டம், ஆரவாரமில்லாத, மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் பிரசாரம், வரும் தேர்தலிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.அதன்படி, தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கு 100 பேரை தேர்வு செய்து, அவர்கள் வாயிலாக வீடு வீடாக மக்களை நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளன. தேர்தலுக்கு முன் இப்பணிகளில் ஈடுபடுவோர் குறைந்தது 10 நாட்களாவது ஈடுபடுவர். அதிகபட்சமாக 30 நாட்களுக்கு பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:எங்கள் பிரசாரம், வழக்கமான கட்சிகளின் பிரசாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு பேர் கொண்ட குழு மூன்று முறை செல்லும்.லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும் என்பதை முதல்கட்டமாக வலியுறுத்துவர். அடுத்ததாக கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனைகள், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, யார் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகவும், நேரடியாகவும், பிரிவினைவாத சிந்தனையை வளர்ப்பவர்களுக்கு ஏன் ஓட்டளிக்கக்கூடாது என்பது குறித்து வாக்காளர்களிடம் கலந்துரையாடுவர். இப்படி மக்களுடன் நேரடியாக கலந்துரையாடுவதன் வாயிலாக மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை