வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அண்டை மாநிலங்களில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் வணிகவளாகங்கள் அவர்களே மின்மாற்றியை அமைத்து பராமரிப்பும் அவர்களே செய்து கொள்கிறார்கள் .
அரசே பழுது தானே .
சென்னை :  தமிழகம் முழுதும், கடந்த 2023 - 24ல், பல்வேறு திறன் உடைய, 10,929 மின் வினியோக, 'டிரான்ஸ்பார்மர்கள்' பழுதாகி உள்ளன. .வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்வதில், 'டிரான்ஸ்பார்மர்' முக்கிய பங்கு வகிக்கிறது. இது, 11,000 வோல்ட் திறனில் வரும் மின்சாரத்தை, 440 வோல்டாக குறைத்து, சீராக மின் வினியோகம் செய்ய உதவுகிறது. மின் தேவை அதிகம் உள்ள இடங்களில், 100, 500 கிலோ வோல்ட் ஆம்பியர் திறனிலும், மின் தேவை குறைவாக உள்ள இடங்களில், குறைந்த திறனிலும் டிரான்ஸ்பார்மர்களை, மின் வாரியம் அமைக்கிறது. இவை, 'டெண்டர்' வழியே, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன.தற்போது மாநிலம் முழுதும், 500 கே.வி.ஏ., திறனில், 14,929; 250 கே.வி.ஏ., திறனில், 54,521; 200ல், 23,856; 150ல், 444; 100ல், 2.08 லட்சம்; 75ல், 1,310; 63ல், 58,093; 50ல், 968; அதை விட குறைந்த திறனில், 53,604 என, மொத்தம், 4.15 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் பயன்பாட்டில் உள்ளன. முறையாக பராமரிக்காதது, 'ஓவர்லோடு' உள்ளிட்ட காரணங்களால், டிரான்ஸ்பார்மர் பழுதாகின்றன. கடந்த, 2023 - 24ல் மட்டும், 10,929 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி உள்ளன. இது, மொத்தத்தில், 2.63 சதவீதம்.  இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர்களில், அடிக்கடி பழுது ஏற்படுகிறது. அவை மாற்றப்பட்டு, புதிதாக நிறுவப்படுகின்றன. கடந்த ஆண்டில் இருந்து, ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரும், தனித்துவ அடையாள எண்ணுடன் வாங்கப்படுகிறது. இதனால் பழுது ஏற்பட்டால், எப்போது, யாரிடம் வாங்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. ஒருங்கிணைந்த பராமரிப்பு பணி திட்டத்தின் கீழ், மின் சாதனங்களில் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு மொத்த டிரான்ஸ்பார்மரில், 4 - 5 சதவீதமாக இருந்த டிரான்ஸ்பார்மர் பழுது, தற்போது பாதியாக குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அண்டை மாநிலங்களில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் வணிகவளாகங்கள் அவர்களே மின்மாற்றியை அமைத்து பராமரிப்பும் அவர்களே செய்து கொள்கிறார்கள் .
அரசே பழுது தானே .