உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 கிலோ போதைப்பொருள் பறிமுதல் இலங்கைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது

15 கிலோ போதைப்பொருள் பறிமுதல் இலங்கைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது

சென்னை:சென்னை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற, 75 கோடி ரூபாய் மதிப்புள்ள, 15.8 கிலோ 'மெத்தாம்பெட்டமைன்' எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மணிப்பூர் மாநிலம், இம்பால் மற்றும் மோரே எனும் பகுதியில் இருந்து, சென்னை வழியாக இலங்கைக்கு மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, சென்னை மண்டல மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார், கடத்தல்காரர்கள் குறித்து துப்பு துலக்கினர்.முதலில் சென்னையைச் சேர்ந்த சிந்தாமணி, வீராசெல்வம், சரவணன், ஜோசப் ஜஸ்டின்பால் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 4.8 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், மணிப்பூர் மாநிலம், இம்பால் மற்றும் மோரே பகுதியில் இருந்து, விமானம் வாயிலாக சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, பின், துாத்துக்குடி, திருவனந்தபுரத்தில் இருந்து, இலங்கைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.இதையடுத்து, சென்னை மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரு மண்டல போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இம்பாலில் மூன்று நாட்களாக முகாமிட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, ஹோட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த கலைமணி, ரவீணா, ரோஷன்குமார், ரவி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 11 கிலோ மெத்தாம்பெட்டமைன், மாருதி ஆல்டோ கார், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு வங்கி கணக்கில் இருந்த, 78.66 லட்சம் ரூபாயை முடக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி