உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆண்டுதோறும் 1.50 கோடி பாஸ்போர்ட்: வெளியுறவு அமைச்சக அதிகாரி தகவல் 

 ஆண்டுதோறும் 1.50 கோடி பாஸ்போர்ட்: வெளியுறவு அமைச்சக அதிகாரி தகவல் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

: இந்தியாவில், வெளியுறவு அமைச்சகம் வாயிலாக ஆண்டுதோறும், 1.50 கோடி பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியாவில், 452வது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று துவக்கப்பட்டது. இதில், பங்கேற்ற பாஸ்போர்ட் சேவை திட்ட இணைச்செயலர் மற்றும் வெளியுறவு அமைச்சக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முபாரக், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், அனைத்து லோக்சபா தொகுதியிலும், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படுகிறது. இதுவரை, 452 பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இனியும், 32 லோக்சபா தொகுதிகளில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும், 1.50 கோடி பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இ - பாஸ்போர்ட் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில், ஒரு மின்னணு 'சிப்' பொருத்தப்பட்டிருக்கும். இதன் வாயிலாக பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல் சேமித்து வைக்கப்படுகிறது. இதன் வாயிலாக, பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடிகிறது. அதாவது, சிப்பில் டிஜிட்டல் கையொப்பத்துடன் தகவல்கள் இருக்கும். அதை திருத்தவோ, போலி பாஸ்போர்ட்களை உருவாக்கவோ முடியாது. பாஸ்போர்ட் சேவை திட்டம், நடப்பாண்டு முதல், 'வெர்சன் 2' ஆக, மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, விரைவு, பாதுகாப்பு என, உலகத்தில் உள்ள 202 துாதரகத்திலும் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை