உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

21 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சென்னை:சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9 இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கியும், 12 இன்ஸ்பெக்டர்களை மற்ற காவல் நிலையங்களுக்கு மாற்றியும் போலீஸ் கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த உஷாராணி, சேகர் சிங், தாமஸ், தீபக் குமார், செல்வராணி, லோகநாதன், சரவணன், வனிதா, விஜயலட்சுமி ஆகியோர், முறையே, மத்திய குற்றப்பிரிவு, வண்ணாரப்பேட்டை, பேசின்பாலம், திருமங்கலம், யானைகவுனி, கோட்டை, விருகம்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனை, நந்தம்பாக்கம் காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். இது தவிர, புதுவண்ணாரப்பேட்டை, தலைமை செயலக காலனி, கோயம்பேடு, மீனம்பாக்கம், திருமங்கலம், பேசின்பாலம், யானைகவுனி, நீலாங்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 12 இன்ஸ்பெக்டர்கள், சென்னையின் மற்ற காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை