உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் சிக்கிய 2.93 லட்சம் பேர் 108 ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சை

விபத்தில் சிக்கிய 2.93 லட்சம் பேர் 108 ஆம்புலன்சில் மீட்டு சிகிச்சை

சென்னை:தமிழகத்தில், 2024 - 25ம் நிதியாண்டில், சாலை விபத்தில் சிக்கிய, 2.93 லட்சம் பேர், 108 ஆம்புலன்ஸ் வழியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின், 108 ஆம்புலன்ஸ் சேவையை, இ.எம்.ஆர்.ஐ., - கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதில், 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள்; 65 பச்சிளங் குழந்தைகளுக்கான அவசரகால வாகனம்; நான்கு வி.வி.ஐ.பி., வாகனங்கள்; 41 இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில், 6,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் பல்வேறு சேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறைக்கு, 10,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும், 11.46 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று விடுகிறது. கடந்த, 2024 - 25ம் ஆண்டு சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட, 2.93 லட்சம் பேரை, உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளோம். இவர்களில், பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.அதேபோல, 2.79 லட்சம் கர்ப்பிணியர், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பயன்பெற்று உள்ளனர். இதர அவசர சேவையில், 9.66 லட்சம் பேர், மலைவாழ் மக்கள், பழங்குடியினர், 70,181 பேர் என, 16.10 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை