உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவுத்துறையில் 3 டி.ஐ.ஜி.,க்கள் மாற்றம்

பதிவுத்துறையில் 3 டி.ஐ.ஜி.,க்கள் மாற்றம்

சென்னை : பதிவுத்துறையில் பணி மூப்பு அடிப்படையில், டி.ஐ.ஜி., பதவிக்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி, உதவி ஐ.ஜி.,க்களாக இருந்த, கே.கே. மஞ்சுளா, எஸ். சுபிதாலட்சுமி ஆகியோருக்கு, டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை பயிற்சி மைய இயக்குனரான, டி.ஐ.ஜி., மஞ்சுளாவும், சேலம் மண்டல டி.ஐ.ஜி.,யாக எஸ். சுபிதாலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சென்னை யில் பதிவுத்துறை பயிற்சி மைய இயக்குனராக இருந்த ஆர்.கவிதாராணி, கடலுார் மண்டல டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை