ரயிலுக்கு அடியில் சிக்கிய 3 பேர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
விழுப்புரம்: 7 மாத குழந்தையுடன் ரயிலுக்கு அடியில் சிக்கிய 3 பேர் சிக்கினர். பயணிகள் அதிர்ஷ்டவசமாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து கிளம்பிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்தடைந்தது.அப்போது திருவண்ணாமலை மாவட்டம் மோரணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கோமதி தம்பதி 7 மாத கைக்குழந்தையுடன் ரயிலில் ஏற முயன்றனர். ஆனால், அவர்கள் ரயிலுக்கு அடியில் விழுந்தனர். அப்போது ரயில் கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனடியாக ரயில் நின்றதால் அவர்கள் உயிர் தப்பினர். இதனால், ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.