சென்னை: மகளிருக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட 133 தேர்தல் வாக்குறுதியை அ.தி.மு.க., அறிவித்துள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டார். அதில் 133 வாக்குறுதிகள் உள்ளன.அதன் முக்கிய அம்சங்கள்:
*சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை*வழக்காடு மொழி தமிழ் இடம்பெற வேண்டும்*மஹாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட உறுதி திட்டத்தை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். சம்பளத்தை ரூ.450 ஆக உயர்த்த வேண்டும்.*மேகதாது அணை, முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்*பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு மூலம் தடுத்து நிறுத்தம்*கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் வலியுறுத்துவோம்*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை*காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்*கச்சத்தீவை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை*பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் ரூ.5 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்*மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்*சென்னை மெட்ரோ ரயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வலியுறுத்தப்படும்*கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்துவோம்.*மத்திய அரசு தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.*ராமநாதபுரத்தில் விமான நிலையம் *முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.*லோக்சபா குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும்*கவர்னர் நியமனத்தின் போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும்.*குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்.*பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும்.*மத்திய அரசு அறிவித்த ஒசூர் விமான நிலையத்தை விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்*நாகை, திருவாரூர் உள்ளடக்கிய ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்*நீட் தேர்வுக்கு மாற்றுத்தேர்வு முறை கொண்டு வர வலியுறுத்தப்படும்*மதுரையில் ஐஐடி, ஐஐம் அமைக்க வலியுறுத்தல்*குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்*அப்பளம் , குண்டு வத்தல் பரமத்தி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க வலியுறுத்துவோம் உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேமுதிக வேட்பாளர் பட்டியல்
அதிமுக கூட்டணியில் தேமுதிக.,விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் தொகுதியில் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி, திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.