உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம்: 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு

34 சப் கலெக்டர்கள் இடமாற்றம்: 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் சப் கலெக்டர்கள் 34 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு துறைகளில் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் பணியிட மாற்றம் செய்யப்பட்:டு வருகின்றனர். இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டு உள்ள உத்தரவில் தமிழகம் முழுவதும் சப் கலெக்டர்கள் 34 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் வருவாய்துறை வெளியிட்டு: உள்ள உத்தரவி்ல், தமிழகத்தில் தாசில்தார் நிலையில் பணியாற்றி வரும் 29 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து சப் கலெக்டர்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் எலக்சன் பி. ஏ., உடனடி நியமனம்

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மாவட்டத்திற்கும் துணை கலெக்டர் நிலையில் எலக்சன் பி. ஏ , நியமிக்கப்படுகின்றனர் . இன்று ஒரே நாளில் 66 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 29 தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் ஆக பதவி உயர்வு அளித்த நிலையில் அவர்கள் மாவட்டங்களில் எலக்சன் பி.ஏ.,வாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்