உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்

நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைய உள்ள நிலையில், பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ''நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை'' என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு நாகலாந்து கவர்னராக இருந்தார். இவரின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைகிறது. இதனால் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுப்பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை'' என பதிலளித்தார். மேலும் அவர் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வரிடம் பேசியிருக்கிறேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகிறது. வயநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ராகுல் மீதான சாதி ரீதியிலான தாக்குதல் குறித்து இப்போது கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

s sambath kumar
ஆக 10, 2024 11:08

ஜாதி பற்றி துண்டுச் சீட்டு இன்னும் கைக்கு வரவில்லை போலும் அதனால் தான் கருத்து கூறமுடியாது என்கிறார்.


R Kay
ஆக 01, 2024 00:26

அப்படி வேறு ஒரு ஆசை இருக்கிறதா என்ன? தமிழே ததிங்கிணத்தோம். விடிந்தாற் போலத்தான் கடவுளே எங்களை காப்பாற்று


பாரதி
ஜூலை 31, 2024 22:43

மனிதனும் இல்லை


Ramesh Sargam
ஜூலை 31, 2024 22:14

ஓஹோ, நீங்கள் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ ஆகும் எண்ணமும் இருக்கிறதா...? விடிஞ்சா மாதிரிதான்.. இந்தியா உருப்பட்டா மாதிரிதான்...


Ramesh Sargam
ஜூலை 31, 2024 20:04

நீங்கள் முதலில் அந்த மாநில முதல்வர் பதவிக்கே தகுதி அற்றவர். வாரிசு அடிப்படையில் கருணாநிதிக்கு பிறகு அந்த பதவி உங்களுக்கு கிடைத்தது.


SSP
ஜூலை 31, 2024 19:13

கடவுளுக்கு Nandri


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2024 18:53

உங்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் உங்களின் அடிப்பொடிகள் நீங்கள் உலக அதிபர் என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்.


D.Ambujavalli
ஜூலை 31, 2024 16:47

கடவுளே அந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றினாயே இல்லையெனில் நாடு பூராவும் கோபாலபுரம் குடும்ப சொத்தாகிவிடுமே


K Subramanian
ஜூலை 31, 2024 16:38

பப்பு ஒட்டுமொத்த இந்துக்களை பற்றி முதல் நாளே என்னவெல்லாம் பேசினான் ? அது பரவைல்லையா?


theruvasagan
ஜூலை 31, 2024 16:20

ஜப்பான் பற்றி கேள்வி கேட்டால் பதில் வரும். ஜப்பான் துணை முதல்வர் ஆச்சே.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ