உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது": துரைமுருகன் உறுதி

"கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது": துரைமுருகன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது' என நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் எனவும் கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம். கர்நாடக அரசு எந்த கமிட்டி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்,

இ.பி,எஸ்.,கண்டனம்

இது குறித்து இ.பி.எஸ்., எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா?. மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
பிப் 18, 2024 00:04

அணைகட்ட முதல் செங்கல் கொடுத்தது உங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள். தைரியமிருந்தால் அவரை அங்குள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கூற சொல்லுங்கள் அணை கட்டக்கூடாது என்று.


R. Vidya Sagar
பிப் 17, 2024 22:12

சரி, தைர்யம் இருந்தால் ஒரு கண்டன அறிக்கை வெளியிடலாமே


Guruvayur Mukundan
பிப் 17, 2024 21:49

The day will not be far away. They will construct and may even publicly have a inaugural function.... and the whole world will come to know of it... But, our Durai... will say the same thing.... that he won't allow them to construct the dam, not knowing what is happening around him.... and may try to fool each one of us.....


ManiK
பிப் 17, 2024 21:03

ஏன்?!!..சிமிண்ட் fulla கொள்ளையடிச்சிட்டீங்களா?!! :)


Ramesh Sargam
பிப் 18, 2024 00:21

சிமெண்ட் மட்டும் அல்ல, மணல், செங்கல் எல்லாவற்றையும் கொள்ளை அடித்திருப்பார்கள். அந்த தைரியத்தில்தான் இப்படி உருகுகிறார்.


raja
பிப் 17, 2024 20:21

தமிழா அவர்கள் திராவிடர்கள் நம்பாதே...உனக்கு துரோகம் பண்ணியதே தான் ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிடர்களின் வரலாறு...


Indhuindian
பிப் 17, 2024 19:09

உடனடியாக சட்டசபையை கூட்டி கர்நாடக அரசுக்கு எதிராகவும் அங்கே ஆளும் காங்கிரசுக்கு எதிராகவும் மேகதாது அணையை கட்டக்கூடாது என்றும் ஒரு மனதாக தீர்மானம் இயற்றி நேரடியாக கர்நாடக ஆளுநருக்கு அனுப்ப கோருகிறேன். கர்நாடக ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்றால் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க அஷுத்தம் தரவேண்டும்


MARUTHU PANDIAR
பிப் 17, 2024 19:34

yaar


Krismoo
பிப் 17, 2024 18:11

நீ வேலூர் மக்களுக்காக கட்டியது சித்தூர் பஸ் ஸ்டாப் , பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் மற்றும் கழிஞ்சூர் பஸ் ஸ்டாப் இதை தவிர உன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீ வேற என்ன செய்தாய் சொல்லு. உன் பரம்பறைகாக நீ செய்துக்கிட்டது கிங்ஸ்டன் பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்பில் கல்லூரி மற்றும் பல சொத்துக்கள். கர்நாடகா தண்ணீர் அவன் அணை கட்டரான்.


vee srikanth
பிப் 17, 2024 17:58

நாங்கள் காவிரி மணல் தருகிறோம் - நீங்கள் அணையை கட்டுங்கள்


krishnan
பிப் 17, 2024 17:46

நாம தடுப்பணை கூட கட்டளை. அம்புட்டும் வாத்தியார் ..அதிகாரி சம்பளத்துக்கு ... உபயம்


krishnan
பிப் 17, 2024 17:42

தங்கள் கர்நாடக தொழில்ளுக்கு வருமானம் எனில் நீட்டின இடத்தில கையெழுத்து போட்டு விடுவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை