உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலைக்குற்றங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கும்: அப்பாவு சப்பைக்கட்டு

கொலைக்குற்றங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கும்: அப்பாவு சப்பைக்கட்டு

திருவள்ளூர்: ''கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம்'' என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறினார்.திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடில் செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனையும் கிட்டத்தட்ட முடிந்தது. தமிழகத்திற்கு மட்டும் இன்னும் துவங்கவே இல்லை. மற்ற எய்ம்ஸ்.,க்கு 3000 கோடி பணம் ஒதுக்கி கட்டுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் கடன் வாங்கி கட்டுங்கள் என்கின்றனர். மெட்ரோ திட்டமும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பித்தது; இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அதேபோல், கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு இதுவரை அனுமதி கூட கொடுக்கவில்லை. கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம். தமிழகத்தில் அனைத்து குற்றங்களுக்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டே தான் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

metturaan
ஜூலை 30, 2024 11:05

கருத்துகள் சொல்லும் போது எல்லாம் நம்ம ஜனங்கள் மிகச் சரியாக தான் சொல்றாங்க... ஆனா ஓட்டு ன்னு வரும் போது மட்டும்.... புரிஞ்சுக்க முடியல... மிகப் பெரும்பான்மையான ஆதரவு கொடுத்துவிட்டு கேள்வி கேட்பது என்ன ஞாயமோ...


மோகனசுந்தரம்
ஜூலை 29, 2024 17:06

அடிப்படை அறிவே இல்லாதவர்கள் எல்லாம் பேசும் பொழுது இப்படித்தான் இருக்கும்.


Raa
ஜூலை 29, 2024 16:45

மற்றவர்களுக்கு நடக்கும் போது அதிகாரவர்கத்தில் இருப்பவர்களுக்கு எப்படி தெனாவெட்டாகத்தான் கேட்கத்தோணும். பேசுங்க பேசுங்க.. கூர்மையான கத்தியைவிட மோசமான ஆயுதம் நாக்கு. வச்சு ஆப்படிக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 29, 2024 16:25

கவர்னர் ரவி மட்டும் அரசியல் பேசக் கூடாது என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பொதுவான சபாநாயகர் மட்டும் அரசியல் பேசலாம் தவறில்லை என்பார்கள்.


என்றும் இந்தியன்
ஜூலை 29, 2024 16:08

இங்கே பாருங்க இந்துக்கள் அனவைரும் Sinners என்று கிருத்துவத்தில் உள்ளது ஆகவே "கொலை குற்றங்கள் இந்துக்கள் மீது நடந்து கொண்டே தான் இருக்கும்" என்று படித்தால் அதன் உண்மையான அர்த்தம் புரியும்


தமிழன்
ஜூலை 29, 2024 15:51

கட்சிக்கு ஒருவர் என்ற பார்வையில் ஒரு பிரமுகர் கொலை செய்ய பட்டு இருக்கிறார்.. ஆனால் திமுக பிரமுகர் மட்டும் இதுவரை இல்லை.. அப்படி என்றால் கொலை செய்தவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று சந்தேக பட கூடாது


தமிழன்
ஜூலை 29, 2024 15:49

அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும்.. தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே உயர் பதவி கொடுக்க வேண்டும். தகுதியானவர்களை தேர்வு செய்ய தெரியாத திமுக பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் உடனடியாக அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும்.


N.Purushothaman
ஜூலை 29, 2024 15:27

ஆளெல்லாம் வாத்தியாரு /ஆசிரியருன்னு ஆனா இப்படித்தான் இருக்கும் ...


Nandakumar Naidu.
ஜூலை 29, 2024 15:26

இதெல்லாம் ஒரு ஆட்சியா? தூ..................தூ.


Rengaraj
ஜூலை 29, 2024 15:24

யாரவது நிருபர் கேள்வி கேட்டா சபாநாயகர் எதுக்கு இந்த மாதிரி பதில் சொல்லணும். ? நடுநிலைமையா பேசத்தெரியவேண்டாமா ? கவர்னர் பேசிட்டாமட்டும் வார்டு கவுன்சிலர் முதல் வட்ட செயலாளர் வண்டு முருகன் வரை பேசுவதை கேட்கவேண்டிய நிலையில் நாடு போய்விட்டது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை