உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை": நிர்மலா சீதாராமன் பேச்சு

"பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை": நிர்மலா சீதாராமன் பேச்சு

திருப்பூர்: 'மக்கள் ஆதரவு அளிப்பதால் குடும்ப அரசியல் தவறில்லை என்பது போல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை' என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். திருப்பூர் அவிநாசியில் நீலகிரி பா.ஜ., வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி பணியாற்றுக்கிறார். பெண்களை முன்னிறுத்தியே பிரதமர் மோடி திட்டங்களை அறிவித்தார். பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தால் தான், கிராம மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். பிரதமர் மோடிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். பெண்களுக்கு வங்கிகளில் கடன்கள் கொடுக்கப்படுகிறது.

குடும்ப அரசியல்

மக்கள் ஆதரவு அளிப்பதால் குடும்ப அரசியல் தவறில்லை என்பது போல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். நாட்டு மக்கள் அனைவரையும் குடும்பமாக பிரதமர் மோடி பார்க்கிறார். பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை. தமிழகத்தில் எம்.பி.யே இல்லாவிட்டாலும் எல்.முருகனை அமைச்சர் ஆக்கியவர் பிரதமர் மோடி. பின் தங்கிய வகுப்பில் இருந்து வந்த எல்.முருகனை அமைச்சராக்கி அழகுபார்த்தவர் பிரதமர் மோடி. திராவிட முன்னேற்ற கழகம் அல்ல; டிரக்ஸ் முன்னேற்ற கழகம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்
ஏப் 14, 2024 13:01

ஏனெனில் அவருக்கு குடும்பமே இல்லை.


venugopal s
ஏப் 14, 2024 12:39

அவரை ஆட்சி செய்யச் சொன்னால் அரசியல் மட்டுமே செய்கிறார்!


அப்புசாமி
ஏப் 14, 2024 10:13

140 கோடி மக்களும் மேரா பரிவார் ஹைன்னுதான் அரசியல் பண்ணுவாரு.


sathish thangavel
ஏப் 13, 2024 17:20

தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் காட்டுங்கள்


முருகன்
ஏப் 13, 2024 16:48

குடும்பம் இருந்தால் அப்போது உன்மை தெரிந்து இருக்கும்


raja
ஏப் 13, 2024 16:28

எழுபது வருசமா நீங்க பன்ணின தப்பை எல்லாம் பத்து வருசமா சரி பண்ணிகிட்டு இருக்கிறவங்க சொல்ல தானே செய்வாங்க


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ