உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்தியுங்கள்": கவர்னர் ரவி அட்வைஸ்

"மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்தியுங்கள்": கவர்னர் ரவி அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற சிந்திக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கி உள்ளார்.சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடந்த தொழில் முனைவு பற்றிய கருத்தரங்கில் ஆர்.என்.ரவி பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் ஏதோ படிக்க வேண்டும் என்பதற்காக படித்து, வேலை தேடும் நபர்களாக இருக்க கூடாது. தொழில் முனைவோர்களாக மாற சிந்திக்க வேண்டும்.நமது தேசம் வியத்தகு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தொழில்முனைவோர் கொள்கை கட்டமைப்பு, ஸ்டார்ட்அப் சூழல் குறித்து விழிப்புடன் மாணவர்கள் இருக்க வேண்டும். இந்த ஆராய்ச்சி மையம் ஆக்கபூர்வ, திறமையான, நம்பிக்கையான மற்றும் லட்சியம் வாய்ந்த புதிய இந்தியாவின் எழுச்சியை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை