| ADDED : ஜன 29, 2024 12:12 AM
ராமநத்தம் : கடலுார் மாவட்டம், ராமநத்தம் சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று காலை ராமநத்தம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, 17 வயது சிறுமி, ஒரு பெண், நான்கு ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.விசாரணையில், 17 வயது சிறுமியை, அவரது உறவினர் பெண், ஈரோட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறி, ராமநத்தத்தில் உள்ள லாட்ஜிற்கு அழைத்து வந்தது தெரியவந்தது.சிறுமி அளித்த புகாரின்படி, ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, பெரம்பலுார் மாவட்டம், நமையூரைச் சேர்ந்த சேகர், 47, செங்குணம் சக்திவேல், 32, அயன்பேரையூர் கார்த்திக், 29, மற்றும் சிறுமியின் உறவுக்காரப் பெண் உட்பட நால்வரை கைது செய்தனர். தப்பியோடிய வேளாண் அதிகாரி ஜெயபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.