உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட திட்டம்: ஜெ., பாணியில் இபிஎஸ்

40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட திட்டம்: ஜெ., பாணியில் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பற்றி முடிவெடுக்க, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க என பலவிதமான குழுக்களை அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக சார்பிலும் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oxh9stkb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., உடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்து, அதே பிடிவாதத்துடன் லோக்சபாவில் களமிறங்குகிறது அதிமுக. பா.ஜ.,வை கழற்றிவிட்டதால், பல கட்சிகள் தங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வருவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கணக்கு போட்டார். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க அதிமுக குழு தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், அந்த கட்சிகள் இன்னும் தங்கள் நிலைபாட்டை வெளிப்படுத்தவே இல்லை.இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், வேறொரு திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது, கடந்த 2014 லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளையும் தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்தார். அதே பாணியில், பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணியில் இடம்பெறவில்லை என்றால், சிறிய கட்சிகளையெல்லாம் கூட்டணியில் சேர்த்து 40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

J.V. Iyer
ஜன 30, 2024 06:37

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள அருமையான திட்டம். நாற்பதிலும் டமால். இப்படியும் இருப்பாங்களா?


Venkatesh
ஜன 29, 2024 20:35

@Kadaparai எடப்பாடிக்கு ஆப்பு இல்லை கடப்பாரை தான்... பாக்கத்தானே போறீங்க... வாயையும் மூடிக்கொண்டு போகும் நாள் வரும்... அது வரைக்கும் சும்மா கம்பு சுத்தி படம் காட்டுங்க..


s vinayak
ஜன 29, 2024 20:35

அஇஅதிமுக தானே? 544 தொகுதியிலும் போட்டி இடலாம்


அப்புசாமி
ஜன 29, 2024 20:04

தி.மு.க வெற்றிக்கு நல்லா கடுமையா உழையுங்க...


Shankar
ஜன 29, 2024 19:48

இப்பவும் ஒன்னும் கெட்டுபோயிடலை. பேசாம மறுபடியும் பாஜகவோட கூட்டணி சேர்த்துக்கோங்க. அது தான் உங்களுடைய கட்சிக்கு நல்லது. உங்களோட கூட்டணிக்கு யாரும் வர்றமாதிரியும் தெரியல. நாட்டில் ஆயிரம் கட்சிகள் இருக்கிறது. ஓட்டுக்கள் ஒவ்வொரு கட்சிக்கும் ஓரளவிற்காவது பிரியும். அப்படி இருக்கிற சூழ்நிலையில் தனியாக தேர்தலை சந்திப்பது ஒரு சீட்டு கூட தேறுமா என்பது சந்தேகம் தான்.


vadivelu
ஜன 29, 2024 19:31

then only he will know his strength.He is building vastles in the Air.


திகழ்ஓவியன்
ஜன 29, 2024 19:13

ஆயிரம் இருந்தாலும் அண்ணாமலைக்கு வேப்பிலை அடிச்சார் பாருங்கள் அருமை அருமை இன்று அவன் தெரு தெருவா சுத்துறான் கூட்டணிக்கு ஆள் இல்லை


vadivelu
ஜன 29, 2024 19:30

அவருக்கு எதற்கு கூட்டணி, அவரின் செல்வாக்கு என்ன என்பத காட்டி, கூட இருந்து இருந்தால் நாலு இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று எடப்பாடி உணர போகிறார்.அண்ணாமலையின் இலக்கு இந்த தேர்தலில் இல்லை.தங்களின் வாக்கு வாங்கி என்ன என்று தெரிந்து கொள்வதுதான்.எப்படியும் தி மு க கூட்டணிதான் வெற்றி பெரும் என்று அவருக்கும் தெரியும்.தமிழர்கள் ஒருமையில் மற்ற தலைவர்களை விழிப்பது அநாகரீகம்.


Arunkumar J
ஜன 29, 2024 19:44

அடப்பாவி, யாரு சுத்துறா, யாரு பதறுறானு தெரிஞ்சிதான் பினாத்துரியா??


Vasu
ஜன 29, 2024 19:55

கனடாவில் கூட டாஸ்மாக் கிடைக்குதா என்ன?


அருண் குமார்
ஜன 29, 2024 21:03

canadaவில் இருந்து ஒரு கதறல்


rajan_subramanian manian
ஜன 29, 2024 18:34

எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் போனதடவை வளர்மதிக்கு ஒட்டுப்போட்டேன். பாராளுமன்றத்தில் பாலுவுக்கு பதிலாக மாம்பழத்திற்கு போட்டேன்.இப்போது எல்லாமே அண்ணாமலைக்குத்தான்.


Sathyam
ஜன 29, 2024 19:30

ஹலோ இந்த பாமாகா ஒரு அப்பா மவன் தண்டமணி பார்ட்டி எல்லாம் இனிமேல் தேறாது முப்பத்தஞ்சு வர்ஷம் என்ன புடிங்கினாங்க வீரப்பன் மாறி ஆளுக்கு சப்போர்ட் பண்ற பார்ட்டி பமாக இனி அந்த கட்சி சின்னம் மாம்பழம் அழுகி நாத்தம் அடிக்குது , இன்னுமா அந்த கேடு கேட்ட அன்புபாணி தண்டமணி வெட்டி ராமதாஸ நம்பறது


Muralidharan S
ஜன 29, 2024 18:30

சொல்றதுதான் சொல்றீங்க...அதுல என்ன வஞ்சனை.. நானூறு இடத்துலயும்'ன்னு சொல்லுங்க...ஜெயிச்சா நீங்களே பிரதமர் ஆயிடலாம்.


Sathyam
ஜன 29, 2024 19:44

பிரதமர் என்ன ஜுஜுஓபி ஐநா இல்ல டிரம்ப் அல்லது பைடேன் இடத்தை கூட எட்டப்பன் ரீச் ஆகலாம் அப்டி ஒரு ஆளுமை திறமை அப்டியே ஆடி போய்ட்டேன் நான் ஷாக் அயீட்டெண்


K.Ramakrishnan
ஜன 29, 2024 18:28

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளக்கூடாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை