உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திறன்மிகு மையங்களாக மாறுகின்றன 44 அரசு பாலிடெக்னிக்குகள் ரூ.2,509 கோடியில் ஒப்பந்தம்

 திறன்மிகு மையங்களாக மாறுகின்றன 44 அரசு பாலிடெக்னிக்குகள் ரூ.2,509 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில், 44 அரசு பாலிடெக்னிக்குகளை திறன்மிகு மையங்களாக மாற்ற, 'டாடா டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடன் 2,509 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. கடலுார் மாவட்டம் வடலுார், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி, அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதிகளில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 59.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள 44 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளை, தொழில்துறையின் 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 2,509 கோடி ரூபாய் செலவில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி ஆணையரகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. தொழில் துறையுடன் இணைந்து கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல், புதிய தொழிற்சார் பாடத்திட்டங்களை உருவாக்குதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், தலைமை செயலர் முருகானந்தம், உயர் கல்வி துறை செயலர் சங்கர், கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை