கோவை : மேற்கு மண்டல ஆயுதப்படையில் இருந்து 236 போலீசார், சொந்த மாவட்டங்களுக்கு செல்லவும், வேறு மாவட்டங்களில் இருந்து கோவைக்கு 225 பேர் வருகை தரவும் நேற்று இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. கோவை மாநகர் மற்றும் மேற்கு மண்டல ஆயுதப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த காவலர்களிடம் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல விருப்ப மனு பெறப்பட்டது. இம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, நேற்று இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது.
இதன்படி, கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 85 பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர்; 17 பேர் கோவை வருகின்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு 35 பேர் வருகின்றனர்; இங்கிருந்து மூன்று பேர் வெளியேறுகின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 79 பேர் வெளியேறுகின்றனர்; 29 பேர் வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு 4 பேர் வருகின்றனர்; 59 பேர் சொந்த மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.
சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு ஐந்து பேர் வருகின்றனர்; ஐந்து பேர் இங்கிருந்த வெளி மாவட்டம் செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்துக்கு 34 பேர் வருகின்றனர்; ஐந்து பேர் வெளியேறுகின்றனர்.
தர்மபுரி மாவட்ட ஆயுதப்படைக்கு 64 பேர் வெளி மாவட்டத்தில் இருந்து வருகின்றனர்; 10 பேர் வெளியேறுகின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட் ஆயுதப்படைக்கு 33 பேர் வருகின்றனர்; இரண்டு பேர் மட்டும் இங்கிருந்து வெளியே செல்கின்றனர்.
இதேபோல், கோவை மாநகர ஆயுதப்படையில் இருந்து 135 போலீசார் சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவைக்கு 21 பேர் வரவும் நேற்று இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்ட அனைவரும் ஆயுதப்படையில் இருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் ஆவர்.