உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.520 கோடி செலவு

மின் கட்டண உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.520 கோடி செலவு

சென்னை : தமிழக மின் வாரியம், அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும் மின் வினியோகம் செய்கிறது. மேலும், விசைத்தறி, வழிபாட்டு தலங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்கு, 15,332 கோடி ரூபாய் மானியம் வழங்க, அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.அதில் வீடுகளுக்கான மானியம், 7,225 கோடி ரூபாயாகவும், விவசாய மானியம், 6,780 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் யூனிட்டிற்கு, 20 காசு முதல்55 காசு வரை கட்டணம் உயர்ந்தது. இந்த கட்டண உயர்வால், அரசுக்கு மானிய செலவு அதிகரித்துள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டிற்கு கூடுதலாக, ரூ.519.25 கோடி மானியம் வழங்க, அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Sasikumar Yadhav
ஆக 15, 2024 11:42

அந்த கூடுதல் செலவு திருட்டு திராவிட மாடல் பாக்கெட்டுக்குத்தானே செல்கிறது . பொதுமக்களிடம் வசூல் செய்து ஆட்டய போடுகிறீர்கள்


ஆரூர் ரங்
ஆக 15, 2024 09:24

நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்கள் 2005 லிருந்து எடுக்கப்பட்ட கரிக்கு வரி வசூலிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதனால் கடந்த 19 ஆண்டுகளுக்கான பழைய நிலுவை வரியையும் சேர்த்து கோல்இந்தியா தமிழக மின்வாரியத்துக்கு விலை நிறுவனங்கள் நிர்ணயிக்கும். அல்லது விலையைக் கடுமையாக ஏற்றும்.. அந்நிலையில் மின் வாரியமே திவாலாகும். விரைவில் கடும் மின்வெட்டுக்குத் தயாராக இருக்கவும்.


Thiruvengadam Ponnurangam
ஆக 15, 2024 09:22

மின் கட்டணம் உயர்வு என்றால் வருமானம் அதிகம் தான ஆகணும். எப்படி கூடுதல் செலவு. மக்கள் எல்லாம் கூமுட்டைன்னு நெனப்பு . முதல ஓட்டுக்காக இலவசம் கொடுக்குறது நிறுத்து அப்பா தான் வருங்கால சந்ததி வாச வலி பிறக்கும். இல்லன்னா உங்க சந்ததி மட்டும் வாழும் யாரும் இல்லாத தனி நாட்டுல


சுராகோ
ஆக 15, 2024 08:14

மின் கட்டண உயர்வால் எவ்வளவு வருமானம் அதிகரித்தது என்று சொல்லவே இல்லை.


சுராகோ
ஆக 15, 2024 08:11

திராவிட மாடல் மதசர்பின்மை சமூகநீதி


Ramesh
ஆக 15, 2024 07:01

வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் இலவசமாக? செய்தி நிறுவனங்கள் சரியாக கூறவேண்டும். இலவச மின்சாரம் முஸ்லிம் பள்ளிகளுக்கும் கிருத்துவ சர்ச்சைகளுக்கு மட்டும் தான். இந்து கோயில்களுக்கு வர்த்தக மின் பயன்பாட்டு அளவில் மின்சார கட்டணம் வசூலிக்க படுகிறது.


Visu
ஆக 15, 2024 11:21

உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை